இதுவரை அவர் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்படும் வழியில் ஆயுதமேந்திய இராணுவத்தினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு அவருக்கு விசேட பாதுகாப்பொன்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னொரு தடவை கொழும்பு நீதவான் பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கியிருந்த உத்தரவுக்கு அமைவாக குறித்த பாதுகாப்பு இதுவரை வழங்கப்பட்டிருந்தது.
ஆயினும் நேற்றும் (19) இன்றும் (20) அவர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட போது இராணுவப் பாதுகாப்பு முற்றாக அகற்றப்பட்டிருந்தது.
சாதாரண சிறைக்கைதி போல சிறைச்சாலை பஸ்ஸில் அழைத்து வரப்பட்ட அவருடன் வந்த சிறைச்சாலை அதிகாரிகள் கூட ஆயுதமெதனையும் வைத்திருக்கவில்லை.
அவர் அழைத்து வரப்பட்ட பஸ் நீதிமன்ற வளாகத்தினுள் பிரவேசித்த பின் அந்த இடத்திலிருந்து நீதிமன்றம் வரை மட்டும் அவருக்கு ஆயுதமேந்திய பொலிசாரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் வெள்ளைக்கொடி வழக்கின் சாட்சியான சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் பிரெட்ரிக்கா ஜேன்சுக்கு அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவின் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் சரத் பொன்சேகாவுக்கான பாதுகாப்பு அகற்றப்பட்டிருப்பதானது, ஒன்றில் சிறைச்சாலைக்கு கொண்டு வரும் வழியில் தப்பியோட முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் அவரைப் படுகொலை செய்வதற்கோ, அல்லது கொண்டு வரப்படும் வழியில் அவரது கருத்துக்கள் மூலம் இராணுவத்தினரைக் காட்டிக் கொடுத்ததன் காரணமாக சினம் கொண்ட பொதுமக்களின் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாகவோ கூறி அரசாங்கத்தின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தின் ஆரம்பம் மட்டுமே என்பதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய அரசாங்கம் திட்டமிடுகின்றதா?