ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ராஜபக்சேவுக்கு எதிராக கொலைகாரனே திரும்பி போ,போன்ற வாசகங்களை முழங்கினர்.தமிழர்களின் மனதை காயப்படுத்த வேண்டுமென ராஜபக்சேவை அழைத்துள்ள காங்கிரஸ் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். உலகமே போர் குற்றவாளியாக பார்க்கும் இலங்கையை பாதுகாக்க இந்தியா தொடர்ந்து துணை போய் கொண்டிருப்பது இந்தியாவில் வாழும் ஏழரை கோடி தமிழ் மக்களை மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் தமிழர்களையும் கொதிப்படைய செய்துள்ளது என்றும், தமிழின விரோத போக்கை நாம் தமிழர் கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது என்றும், இலங்கை அதிபர் ராஜபக்சே பங்குபெறும் நிறைவு விழாவை தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தமிழக மத்திய அமைச்சர்களும், எம்.பி.க்களும் புறக்கணிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.ஆர்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



0 Responses to அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்த கொலைகாரன் சிறப்பு விருந்தினரா -சென்னையில் நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்பாட்டம்