Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை ரத்து செய்வதா அல்லது நீடிப்பதா என்பதை விசாரிக்கும் மத்திய தீர்ப்பாயத்தின் கூட்டம் ஊட்டியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இந்த விசாரணை நம்பிக்கை தருகிறது. கடைசிவரை போராடுவோம். என்றார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்ததற்கு போதிய காரணங்கள் இருகின்றனவா, இல்லையா என்பதை விசாரிப்பதற்காக சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் தலைமையில் மத்திய தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.

ஊட்டியில் இன்று முற்பகல் 11 மணிக்கு நடந்த இந்த கூட்டத்தில் தீர்ப்பாயத்தின் தலைவர் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் தலைமையில் 13 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்த அமர்வின்போது நேரில் ஆஜரான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் இந்த விவகாரத்தில் தீர்ப்பாயத்தின் நிலைப்பாட்டுக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மத்திய உள்துறை அதிகாரி பி.கே மிஸ்ராவிடம் குறுக்கு விசாரணை நடந்தது.

பி.கே. மிஸ்ரா, ‘’விடுதலைப்புலிகள் ஆதரவு எல்லா மாநிலங்களிலும் பரவியிருக்கிறது. நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான சாட்சியங்கள் இருக்கின்றன. இந்த அமைப்பின் மூலம் பல கிளர்ச்சிகள் நடக்கின்றன. எனவேதான் தடை விதித்திருக்கிறோம்.

அமெரிக்கா, கனடா, ஐரோப்பா போன்ற நாடுகளில் இந்த இயக்கத்திற்கு தடை உள்ளது என்றா கூறுகிறீர்கள்.

உடனே வைகோ, அதற்கு ஆதாரம் இருக்குதா என்று கேட்டார்.

தடை இல்லை என்பதற்கு உங்களுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்டார்.

ஊடகங்கள்தான் அதற்கு ஆதாரம் என்று சொன்னார் வைகோ.

பின்னர் மத்திய தீர்ப்பாயத்தின் மறு கூட்டம் சென்னையில் வரும் 28ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இந்த விசாரணை நம்பிக்கை தருகிறது. கடைசிவரை போராடுவோம்.

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் அதிகம் பாதிக்கப்பட்டவர் நெடுமாறன் ஐயாதான். கடைசிவரை போராடி தடையை நீக்குவோம் என்று தெரிவித்தார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

1 Response to விடுதலைப்புலிகள் மீதான தடை: இந்த விசாரணை நம்பிக்கை தருகிறது! கடைசிவரை போராடுவோம்: வைகோ

  1. பார்த்திபன் தமிழ்நாடு‍
    திரு‍ வைகோ, திரு‍ திருமா , திரு‍ நெடுமாறன் மற்றும் அணைவருக்கும் எனது‍ மணமார்ந்த நன்றிகள்,

    விடுதலை புலிகள் மீது‍ உள்ள தடையை நீக்க தமிழர்கள் அணைவரும்
    வருகின்ற 28 ஆம் தேதி சென்னையில் நடக்க இருக்கம் மத்திய தீர்பாயத்திற்க்கு‍ அதிக அளவிலான நபர்கள் தந்திகளை (விடுதலை புலிகளின் மீது‍ உள்ள தடையை நீக்குமாறு) அனுப்புவது‍ நல்லது‍. தந்திகளை அதிக நபர்கள் அனுப்பும் விதமாக தடைளை நீக்க தீவிரமாக போராடும் அமைப்புக்கள், இதற்கு‍ ஏற்பாடு‍ செய்தால் நல்லது. மத்திய தீர்பாயத்திற்க்கு, எந்த விலாசத்துக்கு தந்தி அனுப்ப வேண்டும் என்பதை தெரிவிப்பது‍ வசதியாக இருக்கும். டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித், மத்திய தீர்பாயம், சென்னை உயர் நீதிமன்றம், சென்னை 1 என்ற விலாசம் சரியாக இருக்குமா. மேலும், டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் அவர்களின் மின்னஞ்‍சல் விலாசம் கிடைத்தால் அதிகமான தமிழர்கள், தடையை நீக்க வலியுறு‍த்தி மின்னஞ்‍சல் அனுப்பலாம். தயவு செய்து‍ தெரிவிக்கவும்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com