Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப் புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் மத்திய தீர்ப்பாயத்திடம் நேரில் ஆஜராகி கோரிக்கை வைத்தனர்.

இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த 1992ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு பிறப்பிக்கும் 'அறிவிப்பாணை' மூலம் தடை நீடிக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில் கடந்த மே மாதம் மேலும் 2 ஆண்டுகள் தடையை நீட்டிக்க சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தின்படி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

இந்த சட்டத்தின் கீழ் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பது சரியா என்பது குறித்து தீர்மானிக்க டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் சென் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பாயம் தனது விசாரணையை நடத்தி 6 மாதங்களுக்குள் முடிவை அறிவிக்க வேண்டும். இதன் முதல் இரண்டு கூட்டங்கள் டெல்லியில் நடந்த நிலையில் நேற்று சென்னையில் 3வது கூட்டம் நடந்தது.

இக் கூட்டத்தில் தமிழக க்யூ பிராஞ்ச் போலீஸ் எஸ்.பி. அசோக் குமார் ஆஜராகி, புலிகள் மீதான தடையை நீட்டிப்பதற்கான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்து அளித்த சாட்சியத்தில்,

தமிழகத்தில் கடந்த 2008ம் ஆண்டு முதல் புலிகள் இயக்கத்தினர் 47 பேர் மீதும், அவர்களின் தீவிர ஆதரவாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

புலிகள் இயக்கம் மீதான தடையை நீட்டிப்பதற்கு தேவையான தகுந்த ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய, மாநில அரசுகளின் தகவல் பரிமாற்றம் குறித்த ரகசிய ஆவணங்களும் தீர்ப்பாயம் முன்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து வைகோ ஆஜராகி,

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பில் இந்தியாவில் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இலங்கைத் தமிழர்களின் விடுதலைக்காக மட்டுமே அந்த இயக்கம் உள்ளது. அதன் மீதான தடையை நீடிக்க அரசு கூறும் காரணங்கள் யூகத்தின் அடிப்படையிலானவை ஆகும் என்றார்.

பின்னர் பழ. நெடுமாறன் கூறுகையில்,

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்ததால் நான் நடத்தி வந்த தமிழர் தேசிய இயக்கம் என்ற கட்சி தடை செய்யப்பட்டுள்ளது. என் மீதும், எனது கட்சியினர் மீதும் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பொடா சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன்.

எந்த இடத்தில் கூட்டம் நடத்துவதாக இருந்தாலும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டியுள்ளது. அரசமைப்பு சட்டத்தின்படி எங்கள் பேச்சுரிமையே பறிக்கப்பட்டுள்ளது என்றார்.

தீர்ப்பாயத்தின் விசாரணை இன்றும் தொடர்கிறது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

2 Responses to தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை!

  1. இளமாறன்,தமிழ்நாடு‍
    தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பது‍ தொடர்பாக தீர்ப்பாயத்தின் விசாரணை வரும் 20ஆம் தேதி உதகையில் நடக்க இருக்கிறது, வைகோ, நெடுமாறன் மற்றம் சிலர் கலந்து‍ கொண்டார்கள், அவர்களுக்கு‍ எனது‍ மனமார்ந்த நன்றிகள். இந்த விசாரனையில் மேலும் பல தமிழ் உணர்வுள்ள வக்கீல்கள் கலந்து‍ கொள்ள வேண்டும், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாகவும், விடுதலை சிறுத்கைகள் சார்பாகவும், ஏனைய தமிழ் இயக்கங்கள் சார்பாகவும் வக்கீல்கள் இந்த விசாரனையில் கலந்து‍ கொள்ள வேண்டும்.

     
  2. பார்த்திபன் சென்னை
    திரு‍ இளமாறன் கூறயது‍ போல் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பது‍ தொடர்பாக தீர்ப்பாயத்தின் விசாரணை வரும் 20ஆம் தேதி உதகையில் நடக்க இருப்பதால், இதில் பாட்டாளி மக்கள் கட்சி,விடுதலை சிறுத்தைகள்,புதிய தமிழகம், ஆதி தமிழர் பேரவை, த மு‍ மு‍ மற்றும் தமிழ் ஈழத்துக்கு‍ அதரவு அளிக்கு‍ம் மற்றைய தமிழ் இயக்கங்கள் அவர்கள் சார்பாக வக்கீல்களை வைத்து‍ நடக்க இருக்கி்ன்ற விசாரனையி்ல் கலந்து‍ கொள்ள வேண்டும். மேற்க்கூறிய அரசியல் கட்சிகள் இந்த விசாரனையில் கலந்து‍ கொள்ள தவறினால், அவர்கள் தமிழ் ஈழ விஷயத்தில் வேஷம் போடுகிறார்கள் என்று‍ கருத இடம் உள்ளது.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com