Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான இரண்டு தொடர் நிகழ்வுகள் கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை சிறப்பாக நடை பெற்றது.

இதில் பிரதான பேச்சாளர்களாக Denis Halliday மற்றும் Mary Lawlor பங்கேற்றனர்.

முதல் நாள் நிகழ்வை, இலங்கை சமாதானத்திற்கான அயர்லாந்தின் அமைப்பின்( Irish Forum for Peace in Sri Lanka) முக்கிய உறுப்பினரான Dr. Jude Lal தலைமை தாங்கி நடாத்தினார்.

இரண்டாம் நாள் நிகழ்வை, இலங்கை சமாதானத்திற்கான அயர்லாந்தின் அமைப்பின் முக்கிய உறுப்பினரான Dr. Iain Atack தலைமை தாங்கி நடாத்தினார்.

அவர் தனது உரையில் டப்ளினில் ஏன் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தினை (Permanent Peoples' Tribunal) வைக்க வேண்டியநிலை உருவானது என்பதனை விளக்கினார்.

அவரைத் தொடர்ந்து நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் (Permanent Peoples' Tribunal) நடுவர்களில் ஒருவரான Mary Lawlor உரை நிகழ்த்தினார்.

இவர் தனது உரையில் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையை விபரித்துக் கூறியதுடன். இந்தப் போரானது தமிழ் மக்களுக்கு எதிரான போர் எனவும் ஜனநாயகத்திற்கு எதிரான போர் எனவும் எடுத்துக் கூறினார்.

தொடர்ந்து இலங்கை அரசினால் வன்னியில் இறுதிக்கட்டப் போரின் போது திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களின் அவலங்கள் காணொளி மூலமாக ( Video ) காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் (Permanent Peoples' Tribunal) நடுவர்களில் ஒருவரான Denis Halliday உரை நிகழ்த்தினார்.

இவர் தனது உரையில் இலங்கையில் இடம்பெற்ற போரிற்கு இலங்கை அரசே முக்கிய பொறுப்பு எனவும். யுத்த காலத்தில் சர்வதேச நாடுகள் மௌனம் சாதித்ததன் விளைவாக இடம் பெற்ற இனப்படுகொலையை விபரித்துக் கூறியதுடன், இது சாட்சி உள்ள போர் எனவும் கூறியதுடன், அயர்லாந்து வாழ் மக்கள் அயர்லாந்து அரசினூடாக இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

தொடர்ந்து இலங்கை அரசினால் வன்னியில் இறுதிக்கட்டப் போரின் போது திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட போராளிகள் மற்றும் சரணடைந்த போராளிகளை இலங்கை இராணுவத்தினர் எவ்வாறு படுகொலை செய்தார்கள் என்பதனை விளக்கும் காணொளிகளும் ( Video ) காண்பிக்கப்பட்டது.

இறுதியாக உரை நிகழ்த்திய Dr. Jude Lal, இலங்கை அரசானது தற்பொழுது புதிய வழியில் சர்வதேசத்தில் வாழும் தமிழ் மக்களை அடக்குவதற்காகவும் அழிப்பதற்காகவும், முன்னாள் இராணுவ உயர் அதிகாரிகளை வெளிநாட்டு இராஜ தந்திரிகளாகவும் மற்றும் வெளிநாட்டு உயர் ஸ்தானிகர்களாகவும் நியமிக்கின்றனர் எனவும் கூறினார்.





மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பாக டப்ளினில் நடைபெற்ற இரண்டு தொடர் நிகழ்வுகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com