Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தியாக தீபம் திலீபன், குமரப்பா, புலேந்திரன் உட்பட இவ்விரு மாதங்களிலும் மண்ணுக்காய் தம்முயிர் தந்த அனைத்து எம் தேசப்புதல்வர்களுக்கான எழுச்சி வணக்க நிகழ்வு நேற்று (3-10-10) மாலை 5.30 மணிக்கு South London Merton மண்டபத்தில் பல எழுச்சி நிகழ்வுகளுடன் நடைபெற்றது

இந் நிகழ்வில் பொதுச்சுடரினை சத்தியசீலன் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை திருமதி சுபா அவர்கள் ஏற்றிவைத்ததுடன் நிகழ்வு ஆரம்பமானது.

நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் நீண்ட நேரமாக வரிசையில் நின்று வணக்கம் செய்தது மிகவும் எழுச்சிபூர்வமாக இருந்ததுடன், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இளையோர் முதல் பெரியவர்கள் வரை கவிதை, பேச்சு பட்டிமன்றம் மற்றும் நடனம் என கலைநிகழ்வில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்விற்கு பிரித்தானியாவின் பல பாகங்களிலும் இருந்தும் மக்கள் எழுச்சிபூர்வமாக கலந்து கொண்டதுடன் மண்டபம் நிறைந்த நிலையில் மண்டபத்திற்கு வெளியிலும் திரண்டமை குறிப்பிடத்தக்கது.






மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to லண்டனில் நேற்று நடைபெற்ற எழுச்சி வணக்க நிகழ்வு! (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com