Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடுகடந்த தமிழீழ அரசை வாழ்த்துவதுடன் ஐக்கிய நாடுகள் சபையுடனும் மேற்கத்தைய நாடுகளுடன் இராசதந்திர தொடர்புகளை ஆரம்பிக்குமாறு இலங்கை தமிழ்ச்சங்கம்(அமெரிக்கா) வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளது.

தமிழர் பிரதேசங்களில் இராணுவமயப்படுத்தலை இல்லாமல்செய்தல், வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்திகளை மேற்கொள்ளல், சிறையைிலுள்ள விடுதலைப்புலி போராளிகளை விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்ற விடயங்ளில் கவனம் எடுக்குமாறு கேட்டுள்ளது.

இதேவேளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஸ்வநாதன் ருத்ரகுமாரனுக்கு ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு தமது வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறது. வெள்ளிக்கிழமை அன்று ருத்ரகுமாரனுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக முக்கியமான மற்றும் சவாலான பொறுப்பான இப்பதவியில் சிறப்பாக செயலாற்றுவதற்கு எமது வாழ்த்துக்கள்என்று அமெரிக்கத் தமிழர்கள் வாழ்த்துகிறார்கள். “இந்த நிகழ்வு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்என்று தெரிவித்துள்ள அமெரிக்கத் தமிழர்கள், “எதிர்காலத்தில் தமிழர்களாகிய எமக்காக எதிர்காலம் எதை வைத்திருக்கும் என்பது எவருக்கும் தெரியாது, ஆனால் நவீன தமிழ் வரலாற்றில் ஒரு முக்கியமான புள்ளியாக இருப்பதை இது நிரூபிக்கும்என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கத்திலுள்ள குறைபாடுகளை முழு உலகுமே அறிகிறது. அவர்களது கைகளில் தமிழர்களின் இரத்தக்கறை உள்ளது. அவர்கள் தங்களது சொந்த அரசியலமைப்பைத் திணிக்கிறார்கள். அவர்கள் தமிழர்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள். ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகள் அனைத்தையுமே இவர்கள் முன்னெடுக்கிறார்கள். உலகத்தையே இலங்கை அரசு அச்சுறுத்துகிறது.

இவ்வாறிருக்கையில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு அமைப்பு இருப்பது சிறந்தது என்று நாம் நினைக்கிறோம் எனக் குறிப்பிட்ட அமெரிக்க தமிழர்களின் பேச்சாளர் அதற்குரிய அமைப்பே நாடு கடந்த தமிழீழ அரசாகும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் குறிக்கோள்களையும் அந்தக் கடிதம் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.

ருத்ரகுமாரன் செய்யவேண்டியவை ஏராளம் உள்ளன. ஆனால் அவற்றை அவர் செவ்வனவே செய்வார் எனவும் ஒபாமாவுக்கான அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறிக்கோள்கள் ஆவன:

*இலங்கையின் வடக்கிழக்கிலுள்ள தமிழர்களுக்கான சுதந்திர நாட்டைப் பெறுவது

*கிழக்குத் தீமோர், எரித்ரியா, மொன்ரெனெகுரோ மற்றும் தென் சூடான் போன்ற புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சில தனிநாடுகளுடன் ஆலோசித்து அவை போன்ற பொதுவான விளைவை உண்டுபண்ணல்.

*அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் மற்றும் உலகின் எந்தப் பாகத்திலுமுள்ள அதிகாரபூர்வ மற்றும் பகுதி அதிகாரபூர்வ அமைப்புகளின் அங்கீகாரத்தை வேண்டுதல்.

*சிங்களவர்களை எமது தமிழர்களின் பூர்வீக நிலத்தில் குடியேற்றி எமக்குரிய பாரம்பரியத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு எதிராகக் குரல்கொடுத்தல்.

இக்கடிதத்தின் நகல்கள் அமெரிக்க ராஜாங்க துணைச் செயலாளர் ரொபேர்ட் பிளேக், இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் பற்றீசியா . புட்டெனிஸ் இந்திய பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங், தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, ...தி.மு. செயலாளர் டாக்டர் ஜெயலலிதா ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இக்கடிதத்தின் முழுவடிவத்தையும் வாசிக்க www.Tamilsforobama.com/Letters/Letter_to_Rudrakumaran10810.html என்ற இணையத்துக்குச் செல்லவும்.

ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற அமைப்பு அமெரிக்கத் தமிழர்களின் அரசியல் ரீதியில் செயற்படுகின்ற ஒரு அமைப்பாகும். இலங்கை அரசாங்கத்திடமிருந்து தமிழர்களுக்கென அரசியல் ரீதியான தனிநாடு உள்ளடங்கலாக ஒரு இறுதியான தீர்வு அவசியம் என்று ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு நம்புகிறது.

இவ்வமைப்பைத் தொடர்பு கொள்ள (617) 765-4394 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு பேசவும் அல்லது ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் தொடர்பாடல் பணிப்பாளருக்கு செய்தி அனுப்பவும்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

1 Response to நாடுகடந்த தமிழீழ அரசுக்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்க தமிழ்ச்சங்கம் ஆகியன வாழ்த்து தெரிவிப்பு!

  1. பார்த்திபன், தமிழ் நாடு,

    நாடு‍ கடந்த தமிழீழ அரசுக்கு எனது‍ மனமார்ந்த வாழ்த்துகள். நாடுகடந்த தமிழீழ அரசுக்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு மற்றம் அமெரிக்க தமிழ்ச்சங்கம் ஆகியன வாழ்த்து தெரிவித்துள்ளமைக்கு‍ அனைத்து‍ தமிழர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.‍ ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு மற்றம் அமெரிக்க தமிழ்ச்சங்கம், நாடுகடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவு அளித்துள்ளமைக்கு‍ பாராட்டுக்கள். தமிழர்களே, ஒன்று‍ படுவோம், போராடுவோம் வெற்றி பெறுவோம், விரைவில் சுதந்திர தமிழ் ஈழத்தில் சந்திப்போம். இது‍ போன்று‍ அனைத்து‍ தமிழ்ச் சங்கங்களும், அமைப்புகளும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கு வெளிப்படையான ஆதரவை வழங்கிட வேண்டுகிறேன்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com