Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

30 மாத காலச் சிறைத் தண்டனையை வெலிக்கடைச் சிறைச்சாலையில் அனுபவித்துவரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறைச்சாலையில் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் சிறைக் கைதிகள் அனைவரும் வெலிக்கடைச் சிறைச்சாலையின் உட்புறத்தைத் துப்புரவு செய்தார்கள். அப்பணியில் சரத் பொன்சேகாவும் ஈடுபட்டிருந்தார் என வெலிக்கடைச் சிறைச்சாலையின் மேற்பார்வையாளர் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கடூழியச் சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகள் இவ்வாறான வேலைகளில் ஈடுபடுத்தப்படுவது வழக்கமாகும். எனவேதான் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள சரத்தையும் இவ்வேலையில் ஈடுபடுத்தியதாக அவர் சொன்னார்.

0 Responses to ஈழத் தமிழர்களை கொன்ற பொன்சேகா சிறைச்சாலையைத் துப்புரவு செய்யும் பணியில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com