தமிழ்த் தேசிய மக்கள் முன்னிணியின் ஏற்பாட்டில் யாழ் தென்மராட்சிப் பிரதேசத்திலுள்ள வரணி மாசேரி கிராம முன்னேற்றச் சங்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு மாமனிதருக்கு அஞ்சலி செலுத்தினர்.
வரணி மாசேரி கிராம முன்னேற்றச் சங்கத் தலைவர் திரு.ஆறுமுகம் அவர்களின் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் யாழ் ப்லகலைக்கழக விஞ்ஞான பீட பீடாதிபதியும் ரவிராஜ் அவர்களது நெருங்கிய நண்பருமான பேராசிரியர் கந்தசாமி அவர்களும் கலந்து கொண்டு ரவிராஜ் அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தியதுடன் நினைவுரையும்நிகழத்தினார்.
மேலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கயேந்திரன், திருமதி.பத்மினி சிதம்பரநாதன் மற்றும் வைத்தியர் திருலோகமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டுமலர்வணக்கம் செலுத்தியதுடன் நினைவுரைகளையும் நிகழத்தினர்.
மேலும், அப்பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபர் திருமதி.தவமணிதேவி அவர்களும் சிறப்புரை நிகழத்தினார்.
பெருமளவான மக்களும் கலந்து கொண்டு மலர் வணக்கம் செலுத்தினர்.




0 Responses to மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களது 4வது ஆண்டு நினைவு நிகழ்வு