தமிழீழ விடுதலைப் புலிகள் மீது புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அரசாங்கம் வன்னி மாவட்ட காணிகளை அபகரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் காணி உரிமையாளர்களின் ஆவணங்களை தமிழீழ விடுதலைப்புலிகள் அழித்து விட்டதாக பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.
வடக்கு மாகாணம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில், காணி உரிமையாளர்களின் காணிகளை விடுதலைப்புலிகள் பெற்று, அவற்றை தமது ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு விடுதலைப்புலிகளால் பகிர்ந்தளிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காணி உரிமையாளர்களின் பதிவுப் பத்திரங்களின் பெயர்களை மாற்றியதுடன் அவ்வாறான பல ஆவணங்களை விடுதலைப்புலிகள் அழித்து விட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கான ஆவணங்கள் அரசாங்க அதிபர்கள், அரச காணி அளவை திணைக்களங்களில் கூட தற்போது இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அரசாங்க திணைக்களங்களில் உள்ள காணி உரிமை தொடர்பிலான ஆவணங்களை அரசாங்கமே அழித்து, பின்னர் அவற்றை அரசாங்கம் சுவீகரித்துக் கொள்வதற்கான ஆரம்பக்கட்ட முயற்சியே இது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை ஆவணங்களை கொண்டுள்ள சில காணி உரிமையாளர்களின் காணிகளும், பறிபோகும் அச்சம் காணப்படுவதாக நம்பகத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அவ்வாறான காணிகள் குறித்து விசாரணை செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சு, தனி விசாரணை குழு ஒன்றை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to தமிழீழ விடுதலைப் புலிகள் மீது புதிய குற்றச்சாட்டு: அரசாங்கம்