ஏனைய ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா போன்ற நாடுகளில் தேர்தல் நடத்தி நிறுவப்பட்டதைப் போன்று, இந்தியாவிலும் நாடுகடந்த அரசாங்கத்துக்கான தேர்தல் நடத்தப்படும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் அண்மையில் அறிவித்திருந்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் பேச்சாளர் ஒருவர், இவ்வாறான தேர்தல் எதனையும் இந்திய அரசாங்கம் நடத்தவிட போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளை கடந்த 1992ம் ஆண்டு தடை செய்தது.
யுத்தம் நிறைவடைந்த போதும், இந்த வருடத்தில் இருந்து மேலும் இரண்டு வருடங்களுக்கு இந்த தடையை இந்திய நீடித்தது. அதன் ஏதுநிலைகள் குறித்து நீதியரசர் விக்ரமராஜ் சென் தலைமையிலான தீர்ப்பாயம் நடத்திய விசாரணைகளின் பின்னர், இந்த தடை நீடிக்கப்பட்டது நியாயமானது என தீர்ப்பு வழங்கி இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலை இந்தியாவில் நடத்தமுடியாது: மத்திய அரசு