பிரபாகரனின் மூத்த சகோதரி வினோதினி ராஜரட்ணம், இளைய சகோதரி மற்றும் சகோதரர் ஆகியோர் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரான கடும் சுகவீனமுற்றிருக்கும் பார்வதியம்மாள் வெளிநாட்டிலுள்ள தமது பிள்ளைகளை பார்க்க விரும்புவதாக தெரிவித்து அண்மையில் இந்தக் கோரிக்கையை இலங்கை அரசிடம் விடுத்திருந்தார்.
வல்வெட்டித்துறை பிரதேசத்தில் தலைவர் பிரபாகரனின் சகாக்களுடன் இவர்கள் சந்திப்பொன்றை நடத்தவிருந்ததாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
இந்த இரகசிய திட்டத்தை அறிந்து கொண்ட அரசாங்கம் அனுமதி வழங்குவதனை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமது சகோதரரை இலங்கை இராணுவத்தினரால் தொடக் கூட முடியாதென வினோதினி தெரிவித்திருந்ததாக திவயின சுட்டிக்காட்டியுள்ளது.



இன்னமும் புலி அச்சத்துடனேயே வாழுகிறது சிங்களம் என்பதனை அறியமுடிகிறது. மனிதநேயமற்ற உணர்வுகள் அற்ற அரக்க குணம் படைதத சிங்கஇனவெறியருக்கு உறவுகளின் பாசம் எங்கே தெரியப் போகிறது? தலைவரை எந்த சக்தியாலும் செருங்கவோ தொடவோ முடியாது. இது அத்தனை தமிழரின் நம்பிக்கை.
Nobody can touch my leader