Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்செல்வன்... கவிதை வடிவம் வல்வை சுஜேன்

பதிந்தவர்: ஈழப்பிரியா 02 November 2010

நிலை மாறும் உலகே - எம்மை
நிந்தனை செய்வதேன் நீ தினமே
வந்தனை செய்தே வரம் வேண்டி நிற்கிறோம்
எங்கள் அரசியல் தூதுவன் தமிழ்செல்வன்
நாளை வருவான் எம்மிடம் நலமே

ரெத்தங்கள் சிந்திய யுத்தம் ஓய்ந்திட
பூர்வீகத் தமிழர்க்கு தாயகம் நிலைத்திட
அச்சைய தீரனாய் அரசியல் தூதனாய்
அகில அரங்கில் உலா வந்த ஞானி இவன்

புன்னகை பூக்களின் பேர்ரழகன்
போர் முக வியூகத்தின் வடிவழகன்
லெட்சிய பாதையின் அறிவழகன்
எம் தேசியத் தலைவனின்
சத்திய சோதனை சான்ரழகன்

ஊளி வந்து வேலி போகலாம்
கிளசர் எரித்து உயிர்கள் மாயலாம்
அனல் மின் ஊற்றால்
உலகே அழிந்தாலும்
இறவா வரத்தில் வாழ்பவன் இவன்

அரசியல் அரங்கம் எம்மை அழைக்கிறது
தமிழன் ஏதும் அறியாதவன் என்றே நினைக்கிறது
உலகத் தமிழன் அனைவரும் செல்வனே
பேசு தமிழா பேசு பேசு
மூடவர் முடிதனை உடைத்தெறிந்து
தமிழ்செல்வன் நிழலடி நினைந்து
நீயும் பேசு
தமிழன் அனைவரும் தமிழ்செல்வனே.

சு..தமிழ்ச்செல்வன் காணொளிகள்

0 Responses to தமிழ்செல்வன்... கவிதை வடிவம் வல்வை சுஜேன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com