Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புன்னகை செல்வனே... கவிதை வடிவம் பாமினி

பதிந்தவர்: ஈழப்பிரியா 02 November 2010

மதி முகம் கொண்ட தமிழ் செல்வனே
எங்களை விட்டு எங்கு சென்றாய்....?

தானைத் தலைவனின் தம்பியே
தமிழ் ஈழத்தின் புன்னகை செல்வனே
எங்களை விட்டு எங்கு சென்றாய்..?..

போர்க்களத்துலும் நீ வீரன்..!
புன்னகையிலும் நீ மன்னன்.. !
நீ சிரித்தால் பூமி சிரிக்கும்
நீ இல்லை என்று தமிழ் இனம் அழுகிறது

தமிழ் ஈழம் பெற்றெடுத்த தமிழ் செல்வனே
தாயகத்தை விட்டு எங்கு சென்றாய்..?

கார்த்திகை கரி நாள் வந்ததுவோ
காலனே உனக்கு கண் இல்லையோ
எங்கள் செல்வனை ஏன் பிரித்தாய்..?

தமிழ் ஈழ செல்வனே வானத்தில் இருந்து பாருங்கள்
என்றோ ஒரு நாள் மலரும் தமிழ் ஈழத்தின் ஒளி தெரியும்..

சு..தமிழ்ச்செல்வன் காணொளிகள்

0 Responses to புன்னகை செல்வனே... கவிதை வடிவம் பாமினி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com