Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருச்சிராப்பள்ளி மாவட்ட மூத்த உறுப்பினர் அய்யா பழனியாண்டி (85 அகவை) அவர்கள் நேற்று சாலை விபத்தில் மரணமடைந்தார். அய்யா பழனியாண்டி அவர்களின் இறுதி அஞ்சலி இன்று (15-11-2010) மதியம் 3 மணிக்கு விராலிமலை அருகில் உள்ள அவரின் சொந்த ஊரான வானதிராயண்பட்டியில் நடைபெற்றது.அதில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு கட்சி கொடியுடன் மரியாதை செலுத்தப்பட்டது.

அண்ணன் சீமான் அவர்களை கைது செய்ததை கண்டித்து (12.7.2010) அன்று நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கைதாகி திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் ஒருவாரம் இருந்தவர்களில் ஒருவர். அவரின் தீவிர தமிழ் உணர்வால் தமிழ் தேசியத் தலைவர் மற்றும் அண்ணன் சீமானின் தமிழ் தேசிய பாதை அவரை ஈர்த்தது. அய்யா 85 அகவையை கடந்தாலும் இளைஞன் போல் எங்களோடு பல அரசியல் நிகழ்வுகளை பகிர்ந்துகொள்வார்.

0 Responses to திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சின் மூத்த உறுப்பினர் அய்யா பழனியாண்டி அவர்கள் இயற்க்கை எய்தினார் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com