அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை வெளிக்கொண்டு வருவதற்கான கையெழுத்து வேட்டை தொடக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாகவே யாழ்ப்பாணத்தில் இன்று பொதுமக்களின் கையெழுத்தைப் பெறும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அதன் போது கையெழுத்து திரட்டும் பணிகள் நடந்து கொண்டிருந்த இடத்துக்கு திடீரென வந்த பொலிசார் அங்கிருந்த ஐம்பது பேரைக் கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். தற்போதைக்கு அவர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் விசாரிக்கப்படுவதாக தெரிவிக்க்பபடுகின்றது.
கைது செய்யப்பட்ட ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மாணவர்களில் 10 மாணவிகளும் உள்ளடங்கியிருப்பதாக மேலும் தெரிய வந்துள்ளது.
கையெழுத்து நடவடிக்கை யாவும் நிறைவடைந்த வேளையில் படையினரின் பிரசன்னத்துக்கு மத்தியில் சிவில் உடையில் வந்தோர் கையெழுத்து நடவடிக்கையில் பங்கேற்றோர் மீது தக்காளிப்பழம் கற்கள் மற்றும் கூழ் முட்டைகளை எறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 Responses to யாழில் காணாமல்போனோரின் பெற்றோர்கள் கதறி அழுதனர்! அவர்கள் மீது கூழ்முட்டை வீச்சு! (படங்கள் இணைப்பு)