Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாங்கள் வாழ்ந்து வந்த காணிகளில் அவர்கள்(சிங்களவர்கள்) வந்து குடியேறும் போது நாமும் குடியேறத்தானே வேண்டும் என்று யாழ்.நாவற்குழியில் குடியமர்ந்துள்ள யாழ்.மக்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்.தொடருந்து நிலையத்தில் இருந்த சிங்களக் குடும்பங்கள் இரவோடிரவாக யாழ்.நாவற்குழியில் குடியமர்தப்பட்டிருந்தனர்.

அவர்கள் குடியேற்றப்பட்டிருந்த காணி அரச காணியென்று தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அந்தக் காணிகளில் ஏற்கனவே தமிழ் மக்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

சிங்கள மக்கள் குடியேறியதை அடுத்து அங்கு விரைந்த தமிழ் மக்கள் ஏனைய காணிகளை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களைப் பார்வையிடுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலரும் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் சென்றிருந்தார். அவரைச் சந்தித்த மக்கள் தமது நிலைப்பாடு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:

நாங்கள் வெவ்வேறு மக்களின் வீட்டுக்காணிகளில் வாழ்ந்து வருகின்றோம். 1995ஆம் ஆண்டு இந்த மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து வெளியேறியிருந்தோம். இந்நிலையில் மீண்டும் நாங்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் வெவ்வேறு காணிகளில் அலைந்து திரியும் போது எமது நிலத்தில் சிங்களவர்கள் வந்து எவ்வாறு குடியேற முடியும் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.


இதன் போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ், பிறேமச்சந்திரன்,

நாற்பது ஐம்பது வருடங்களுக்கு மேலாக எமது மக்கள் இருப்பதற்கு இடமில்லாமல் பல்வேறுபட்ட இடங்களிலும் இருந்துவருகின்றனர்.

அவர்களுக்கு உரிய வசதிகளை அரசு செய்து கொடுத்திருக்கவேண்டும். மாறாக அவர்கள விரட்டப்பட்டிருப்பதுடன், அவர்களின் இடங்களில் சிங்களவர்களும் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் எமது மக்கள் தமது இடத்திற்கு வந்திருக்கின்றார்கள். இந்த நடவடிக்கை சரியான நடவடிக்கை தான். எனவே அரசு உடனடியாகச் செயற்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுத்து எமது மக்களுக்கான ஆவணங்களை வழங்கவேண்டும்.

இது அரசினுடைய கடைமை. அரசு சட்ட ரீதியாகச் செயற்படாமல் அதற்கு மாறாக தென்னிலங்கையில் இருந்து மக்களைக் கொண்டுவந்து எமது மக்களுக்குச் சொந்தமான காணிகளில் குடியமர்த்துவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே எமது மக்கள் குடியேறுவார்கள் என்பதும் அவர்களைக் குடியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுமே எமது கருத்தாகும் என்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.




மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to நாவற்குழியில் தமிழர்கள்! தமிழர்கள் என்றால் கேவலமா? (காணொளி, படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com