57ஆவது வாரமாக நடைபெறும் ஒன்றுகூடல் பாரிசு நகரில் பிரபல்யம் வாய்ந்த இடமும், பல வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள இடமான Eglise de la Madeleine க்கு அருகில் இன்று பிரான்சு வாழ் தமிழீழ மக்களால் நடாத்தப்பட்டது.
அமைதி வணக்கத்துடன் ஆரம்பமாகி மக்கள் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தும் வகையில் கோசங்களை முழக்கமிட்டனர். சிங்கள அரச அதிபரின் உருவம் செருப்பு மாலைகள் அணிவிக்கப்பட்டு மரத்தில் கட்டித்தொங்க விடப்பட்டிருந்தன.
கொடிய இராணுவ தளபதிகளின் படங்கள் பதாதைகளாக மக்கள் ஏந்திப்பிடித்திருந்தனர். 3.30 மணிமுதல் கடுமையான குளிர்களுக்கு மத்தியில் ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்காணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். மாலை வரை தமது கோசங்களை குரல்கொடுத்துக் கொண்டிருந்தனர்.
அருகில் உள்ள பிரமாண்டமான வரலாற்று புகழ்மிக்க தேவாலயத்திற்கு வரும் வெளிநாட்டிவர்களின் கவனத்திற்கும் தமிழ்மக்களின் போராட்டம் கவனத்தை ஈர்ததை காணக்கூடியதாக இருந்தது.
இறுதியாக கருத்துக்கூறிய சிலர் சிங்கள அரசு தற்பொழு மிகவும் பயந்து போய் இருப்பது புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களுக்கே என்றும், தாயகத்தில் தமிழ் மக்கள் அடிக்கி ஒடுக்கப்படுகின்றார்கள். வாய்பேசமுடியாத நிலையில் உள்ளனர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு தற்பொழுது கொண்டு வரப்பட்டுள்ள தனிச்சிங்களத்திலான தேசியகீதம்.
புலம் பெயர்ந்த மக்களின் தாயக உணர்வுக்கு மதிப்பளிப்பதை விட்டுவிட்டு யாழ் மாநகரசபை முதல்வர் திருமதி இமெல்டா அம்மையார் புலம் பெயர்வாழ் தமிழ்மக்கள் மனம் புண்படும் வகையில் கருத்து சொல்லியிருப்பது கவலைக்குரியதே என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்னும் பல்வேறு வழிகளில் இதுவரைகாலமும் விடுதலையில் உழைத்தவர்களாக கருதப்படும் பலவீனமானவர்களை கண்டறிந்து அவர்களின் ஊடாக உறுதியோடும், நேர்த்தியான பாதையில் இதுவரை காலமும் உழைத்தவர்களை உதாசீனம் செய்து, ஒற்றுமை வேண்டும் என்று கூறிக்கொண்டு ஒற்றுமையை குலைத்து, இணையத்தளங்களிலும், பல்வேறு வழிகள் ஊடாக மக்களை குழப்பி வருபவர்கள் மீது கவனம் எடுக்கும்படியும், இவர்களை விரைவில் யார் என்று மக்கள் முன் இனம் காட்டப்படுவார்கள் என்றும் இவர்கள் எவராவது இப்படியான சனநாயக வழிப்போராட்டத்தில் எப்போதாவது பங்கு கொண்டுள்ளார்களா என்பதையும் அவர்களிடம் கேட்கும் படியும் கூறியிருந்தனர்.
தொடர்ந்தும் நாம் எத்தனை தடைகள் வந்தாலும் தொடர்ந்து எமது நீதிக்காக போராட வேண்டும் என்றும், எமது தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாட்டு தமிழ் உணர்வாளர்கள் மேற்கொண்ட போராட்டத்தினால் தமிழீழ மக்கள் மனதில் ஒரு தனியான இடத்தைப் பெற்றுக்கொண்ட நாம் இயக்கத்தலைவர் சகோதரன் சீமான் அவர்கள் சிறையில் இருந்து விடுதலையானது ஒரு உளரீதியான உற்சாகத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது.
அத்துடன் போர் குற்றத்துக்கான ஆதாரங்கள எம் மக்கள் பல நுற்றுக்கணக்கானோர் தமது உறவுகள், தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை எழுத்து மூலமாக தந்து ஐநாவிடம் நீதி கேட்டு நிற்கும் நிலையில் இது இத்துடன் முடிந்து விடவில்லை.
சீறிலங்கா அரசுக்கெதிரான போரக்குற்றம், மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களுக்கான தகவல்கள தொடர்ந்தும் சேர்க்கப்பட்டு உலகநீதிமன்றங்கள் எமக்கு நீதி தரும் வரை நாம் தளர்ந்து விடாமல், ஐநா போர்க்குற்ற பதிவுகள் எமக்கு முதல் படி,நாம் சாதிக்கவேண்டியவை நிறையவே உள்ளது.
அந்த மக்கள்,மாவீரர்களின் கனவுகள்,எமது மக்களுக்கு விடுதலை கிடைக்கும் வரை எமது போராட்டங்கள் தொடரும். அந்த ஜனநாயக மக்கள் போராட்டம் உலக அரசுகளை விழிப்படைய செய்ய நாம் ஒன்றாக தொடர்வோம் என்று கூறி, தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்று கூறி நிறைவு பெற்றது.
பத்திரிகைத் தொடர்பாளர்
தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு



படு கொலை புரிந்தோருக்கு தண்டனை கிட்டும் வரை ஓயாது தமிழர் போராட்டம் என்பதனை புரியவைக்கின்றது பிரன்ஸ் தமிழர்களின் இப் போராட்டம். அனைத்தத் தமிழரும் ஒற்றுமையாக செயல்பட்ட எம் இனத்தை அழித்த கொலைவெறியரை நீதியின் முன் நிறுத்துவோம். அது வரை ஓயமாட்டோம்.