ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கீழுள்ள அரசாங்கம், திட்டமிட்ட வகையில் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கனேடிய தமிழ் காங்கிரஸின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்துள்ளார்
இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மாத்திரமே பாடவேண்டும்.தமிழில் தேசிய கீதம் பாடப்படக்கூடாது என மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தமிழ் கலாசாரத்தை அழிக்கும் செயற்பாடு என்று டேவிட் பூபாலபிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இனப்படுகொலையை நடத்திய மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் தற்போது தமிழ் இனத்துவத்தை தகர்த்து, சிங்கள நாடு என்ற கோட்பாட்டுக்கு வழிவகுப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில் ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு சென்று திரும்பிய நிலையில் அவர் இந்த கருத்துக்களை டைம்ஸ் ஒப் இந்தியாவுக்கு தெரிவித்துள்ளார்



0 Responses to ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை: பூபாலபிள்ளை