Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்சின் கிழக்குப் பாகத்தில் இருக்கும் ஸ்ரார்ஸ்பூர்க் நகரத்தில்தேசத்தின் குரல்அன்ரன் பாலசிங்கம் அவர்களினது நான்காம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, 18.12.2010 அன்று சனிக்கிழமை பி.பகல் 2மணியளவில் தமிழ்ச்சோலை மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம், மலர்வணக்க நிகழ்வுடன் பாலா அண்ணாவின் நினைவுகளும் பகிரப்பட்டன.

இந்த நிகழ்வில் தமிழ்ச் சோலை மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதே நேரம் ஸ்ராஸ்பூர்க் நகரத்தில்தேசத்தின் குரல்படிப்பகம், “தேசத்தின் குரல்”; கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளன்று திறப்புவிழா செய்யப்பட்டிருந்ததுடன், இந்தப் படிப்பகத்தில் தமிழ் மொழிப் பொத்தகங்களும் ஆங்கில மொழிப் பொத்தகங்களும் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


0 Responses to தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் நினைவு வணக்க நிகழ்வு: பிரான்ஸ் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com