இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை தமது நிபுணர் குழு சிங்கப்பூரில் வைத்து சந்திக்க பான் கீ மூன் விருப்பம் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இலங்கைக்கு வெளியில் ஐ.நா. நிபுணர் குழுவை சந்திக்காது என நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தமது குழு இலங்கைக்கு சென்றால் அங்கு உள்நாட்டு அரசியல் பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற காரணத்தினாலேயே பான் கீ மூன் இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளதாக லக்பிம செய்திதாள் தெரிவித்துள்ளது
எனினும் தாம் வெளிநாட்டில் பான் கீ மூனின் குழுவை சந்திக்கப்போவதில்லை என்று ஏற்கனவே கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
இதற்கிடையில் பான் கீ மூனின் குழு இலங்கைக்கு வந்து கற்றுக்கொண்ட பாடங்கள் குழுவை சந்திக்கச்செய்யும் முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சித்து வருகிறது
இதன் முனைப்பாக அது தமது அரசாங்கத்தின் அமைச்சரான விமல் வீரவன்ச, மற்றும் ஒரு அமைச்சரான ஹெல உறுமயவின் சமபிக்க ரணவக்க ஆகியோரை இணங்கவைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு இலங்கைக்கு வெளியில் ஐ.நா. நிபுணர் குழுவை சந்திக்காது
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் நிபுணர் குழு இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் குழுவை இலங்கைக்கு வெளியில் வைத்து சந்திக்கலாம் என்ற தகவல் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தகவல்படி, தமது குழு இலங்கைக்கு வெளியில் பான் கீ மூனின் குழுவை சந்திக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்தால், தாம் இலங்கையில் வைத்து மாத்திரம் பான் கீ மூனின் குழுவை சந்திக்கவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை தமது ஆணைக்குழு பூஸா முகாமில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை சந்திக்க செல்லவிருந்த போதும் அது எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் ஆலோசகர் என் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.



0 Responses to நல்லிணக்க ஆணைக்குழுவை சிங்கப்பூரில் சந்திக்க பான் கீ மூன் விருப்பம்