Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழர் தாயகப் பிரதேசத்தில் கட்டி எழுப்பப்பட்டிருந்த தமிழீழ நடைமுறை, சிறிலங்கா அரசினால் அழிக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்துள்ளது.

இந்தநிலையில் யுத்தத்தினால் அழிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தை கட்டி எழுப்ப உலக நாடுகளிடமிருந்து கோடிக்கணக்கான பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்ட பணத்தைக் கொண்டு வடக்கை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தின் பெயர் ''வடக்கின் வசந்தம்'' என்று வைக்கப்பட்டது.

வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி தபாலகம் கோதுமை மா மயமாக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி அஞ்சல் அலுவலக அதிபர் தனது வீட்டுக்கு நிவாரணமாக வழங்கப்படும் கோதுமை மாவை வீட்டில் இருந்து கொண்டுவந்து சுடுநீரில் கரைத்து முத்திரை ஒட்டுவதற்காக பயன்படுத்துகின்றார்.

அதுவே பொது மக்களுக்கும் அலுவலக தேவைக்கும் பசையாக பயன்படுத்தப்படுகின்றது.

அதன் வெளிப்பாடாக விடுதலைப் புலிகளது ஆளுகைக்குள் இருந்தபோது தபாற்கந்தோரில் முத்திரை ஒட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பசை (கம்) கடைகளில் வாங்கப்பட்டது.

எப்படி இருக்கிறது வடக்கின் வசந்தம் திட்டத்தின் அபிவிருத்தியின் வேகமும் நவீனமயமாக்கலும்.

0 Responses to வடக்கின் வசந்தம் - கோதுமை மாவில் முத்திரை ஒட்டும் பசை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com