Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

.நா. சபையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை கொண்டு செல்வோம் என்று பாஜக தலைவர் நிதின் கத்காரி கூறியுள்ளார்.

நேற்று சென்னை மீனம்பாக்கம் அருகே இராணுவ மைதானத்தில் நடைபெற்ற பாஜக விழாவொன்றில் பாஜக தலைவர் நிதின் கத்காரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

இலங்கையில் உள்ள தமிழர்கள் தாக்கப்பட்டதற்காக தமிழகம் மட்டும் வருந்தவில்லை. இதை தமிழகம் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக பார்க்கக் கூடாது. இந்தியாவின் தேசிய பிரச்சினையாக இதைப் பார்க்க வேண்டும்.

இலங்கை தமிழர்களின் வாழ்வுக்காக பாரதீய ஜனதா கட்சி பாராளுமன்றத்தில் குரல் எழுப்பும். அங்குள்ள தமிழர்களுக்காக .நா. அவையில் புகார் செய்யப்படும். இலங்கை தமிழர்கள் நலனுக்காக பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மருத்துவம் உட்பட அடிப்படை வசதிக்காக ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.

தமிழர்கள் முழு உரிமைகளோடு இலங்கையில் வாழ்வதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்கள் மரியாதையோடும், உரிமைகளோடும், கெளரவத்தோடும் வாழ்வதற்குரிய நடவடிக்கைளை செய்ய வேண்டிய கடமை இலங்கை அரசுக்கு உள்ளது.

0 Responses to ஐ.நா. சபையில் ஈழத் தமிழர் பிரச்சினையை எழுப்புவோம்: பாஜக தலைவர் நிதின் கத்காரி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com