Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்த முத்துக்குமார் மற்றும் 18 பேரின் நினைவு அஞ்சலி பொதுக்கூட்டம் சென்னை பெரவள்ளூரில் நடைபெற்றது. .தி.மு.. பொதுச் செயலாளர் வைகோ இதில் கலந்து கொண்டு கூறியதாவது:

இலங்கை தமிழர்களுக்காக உயிர் ஆயுதம் ஏந்தி தியாகச் செம்மலாக மாறிய தம்பி முத்துக்குமாரின் மரணம், தமிழ்நாட்டில் இளைஞர்களை தட்டி எழுப்பியுள்ளது. இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கி தமிழர்களை வீழ்த்த துணை போன மத்திய அரசின் துரோகத்தை மறக்க முடியாது.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள தமிழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழர்கள் வசித்த பகுதிகளில் சிங்களர்கள் குடிய மர்த்தப்பட்டு வருகிறார்கள். 300 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் 50 பேருக்கு மட்டுமே சாப்பாடு வழங்கப்படுகிறது.

இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்ற வழக்கறிஞர் கயல்விழி, பிரபாகரனின் தாயை சந்தித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன் என்று கூறியதும் அந்த தாய் கண்கலங்கி உள்ளார். ஈழத்தமிழர்களின் போராட்டம் முடிவுக்கு வர வில்லை.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். தகுந்த நேரத்தில் அவர் மக்கள் மத்தியில் தோன்றுவார். இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும். நம் கண் முன்னே தமிழ் ஈழம் மலரும் என்றார்.

0 Responses to இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்: வைகோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com