Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடு கடந்த தமிழீழ அரசு ஏன் என்ற தலைப்பில் நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையத்தின் வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி சென்னையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்நிகழ்வுக்கு அன்னையர் முன்னணியைச் சேர்ந்த பேராசிரியர் சரஸ்வதி தலைமையேற்கிறார்.

தமிழர் தேசிய விடுதலை இயக்க தோழர் தியாகு அறிமுக உரையாற்றுகிறார். பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் மணிவண்ணன் உரையாற்றவுள்ளனர்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு மாணவர் கழக தோழர் மருத்துவர் எழிலன், இந்திய தௌஹீத் ஜமாத் எஸ்.எம்.பார்க்கர், கருநாடக மக்கள் இயக்க சி.ராஜன், இதழாளர் தோழர் அய்யநாதன், இதழாளர் தெ.தீ.சு.மணி ஆகியோர் பங்கேற்று கருத்துரையாற்றவுள்ளனர். இந்நிகழ்வி அனைத்து தமிழுணர்வாளர்களும் திரளாக கலந்துகொள்ள வேண்டுமென்று நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் அழைப்பினை விடுத்துள்ளது.




0 Responses to சென்னையில் பெப்ரவரி 4 ஆம் திகதி நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மைய கருத்தரங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com