Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனடா மாநிலங்களவை தேர்தலுக்கான மாக்கம் - யூனியன்வில் தொகுதி கொன்சவேட்டிவ் வேட்பாளராக ஈழத்தமிழர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் மாநிலங்களில் பெரியதும், அதிக அளவில் தமிழ் மக்கள் வதிவதுமான ஒன்ராரியோ மாநிலத்தின் பாராளுமன்றத்திற்காக வரும் ஒக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் கொன்சவேட்டிவ் கட்சிக்கான வேட்பாளருக்காக மாக்கம் - யூனியன்வில் தொகுதியில் சனிக்கிழமை பெப்பிரவரி 5ஆம் நாள் நடைபெற்ற தேர்தலில் கட்சி உறுப்பினர்களால் சான் தயாபரன் கட்சியின் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டார் என்ற அறிவித்தலை ஒன்ராரியோ கன்சவேட்டிவ் கட்சித்தலைவர் ரிம் கியூடாக் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

பெருமளவில் கனடியர்கள் கலந்து கொண்டு வாக்களித்த இத்தேர்தலில் பெருவாரியான தமிழர்களும் கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் கலந்து கொண்டு சான் தயாபரனின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.

அனைத்து மக்களின் ஆதரவுடனும் கட்சியின் வேட்பாளராக தான் தெரிவு செய்யப்பட்டுள்ளமை பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக சான் தயாபரன் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.

முதலில் கனடிய பாராளுமன்றத்திற்கான தேர்தலில் ஆளும் மத்திய கன்சவேட்டிவ் கட்சியின் ஸ்காபுரோ கில்வூட் தொகுதி உறுப்பினர் சக் கொங்கல் சான் தயாபரனை கட்சி உறுப்பினர்களுக்கு ஆதரித்து அறிமுகம் செய்து வைத்தார். நான்கு வேட்பாளர்களுக்கிடையே நிலவிய போட்டியில் சான் தயாபரன் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று வேட்பாளராக தெரிவானார்.

ஓன்ராரியோ மாநிலத்திற்கு இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள முதல் கனடியத் தமிழர் என்ற பெருமையும் அவரையே சாரும். கடந்த காலங்களில் ஒன்ராரியோ மாநில பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் போட்டியிட்டாலும், வெற்றிபெறக் கூடிய தொகுதியொன்றில் முக்கிய கட்சியொன்றின் சார்பில் தமிழர் ஒருவர் போட்டியிடுவது இதுவே முதற்தடவை என வாக்களிப்பில் கலந்து கொண்ட தமிழர் ஒருவர் பெருமையுடன் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார். தமிழ் மக்களிடையே நன்கு அறியப்பட்ட சான் தயாபரன் கனடிய அரசியல் நீரோட்டத்தில் கலந்து முன்நிற்பது இரட்டிப்பு மகிழ்ச்சி தருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0 Responses to கனடாவில் மாநிலங்களவை தேர்தல் - ஈழத்தமிழர் தெரிவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com