கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நாகை, காரைக்காலை சேர்ந்த 112 மீனவர்களை, சிங்கள ராணுவம் சிறை பிடித்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மேலும் 24 தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் மீண்டும் சிறை பிடித்துள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் பாஜக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய கம்யூனிஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனது கண்டனங்களை தெரிவித்திருந்தன.
இந்நிலையில் அரசியல் பிரவேசம் எடுக்கவுள்ள நடிகர் விஜய், திடீரென சிங்கள ராணுவத்தினரின் அட்டூழியத்தை கண்டித்து, வருகிற 22ந் தேதி நாகப்பட்டினத்தில் தனது ரசிகர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.
இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில செயலாளர் ரவிராஜா நாகப்பட்டினத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
நாகை காடம்பாடி மைதானத்தில் வருகிற 22 ந் தேதி மாலை 4 மணிக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்திற்கு திரைப்பட இயக்குனரும், நடிகர் விஜய் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்குகிறார்.
கூட்டத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கண்டன உரை ஆற்றுகின்றனர். முன்னதாக மேடையில், இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர் பாண்டியன், புஷ்பவனத்தை சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் ஆகியோரின் குடும்பத்திற்கு நிதியுதவியும், நாகையை சேர்ந்த 10 மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களையும் நடிகர் விஜய் வழங்குகிறார் என்று தெரிவித்தார்.



what a great fucking drama?