அதேசயம், தென் சூடானை போன்றதொரு, தீர்வை வடக்கு கிழக்கில் கொண்டுவரவும் புலம்பெயர் தமிழ் சமூகம் முற்பட்டுள்ளது என்ற செய்திகளும் தற்போது கசிந்துள்ளதாக லக்பிம தெரிவித்துள்ளது. இந்த பணிகளுக்கான நிதி உதவிகளை புலம்பெயர் தமிழ் சமூகம் தொடர்ந்து வழங்கியவாறு உள்ளதாகவும், விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு கிளைகள் தமது செயற்பாட்டை வேகப்படுத்தி வருகின்றன எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது. கனடாவையே விடுதலைப்புலிகள் பிரதான தளமாகப் பயன்படுத்தக்கூடும் என்ற செய்தியும் வெளியாகியுள்ளதாக அச் சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளின் பல இளநிலை தளபதிகள் கனடாவுக்கு சென்றுள்ளதாக சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளனர். இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஊடாக தப்பிச் சென்ற விடுதலைப்புலிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதானமாக தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளின் ஊடாகவே பல படையணிகள் தப்பிச் சென்றுள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து இரண்டு கப்பல்களில் 600 இற்கு மேற்பட்டோர் ஏற்கனவே தப்பிச் சென்றுள்ளனர் என பிற குறிப்புகள் தெரிவிப்பதாக லக்பிம தெரிவித்துள்ளது. புலம்பெயர் தமிழ் சமூகம் பல அரசியல் போராட்டங்களை முன்னெடுத்துள்ள போதும் அது ஒரு ஆயுதப் போராட்டத்தையும் விரும்புகிறது என்ற உண்மையும் வெளிச்சமாகியுள்ளதாக லக்பிம தெரிவித்துள்ளது.
எனவே அவர்கள் முதலில் கெரில்லா தாக்குதல்களை ஆரம்பிக்கும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன என்கிறது லக்பிம.
இருப்பினும் மாறுபட்ட , இல்லை நடைமுறைக்கு தற்போது சாத்தியமற்ற செய்திகளை சிங்கள ஊடகங்கள் வெளியிடுவதன் மூலம், இராணுவ நிலைகளை அகற்றுவதை தடுக்கவும், தமது பக்கத்தில் ஞாயம் இருப்பதாக காட்டிக்கொள்ளவும் வெளிநாடுகளில் குறிப்பாக கனடா போன்ற நாடுகளில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசுகளை திசை திருபவும் புலம் பெயர் தமிழ் சமூகத்தினூடகவே தாம் தகவல்களை பெற்றோம் எனக் கூறி புலம் பெயர் தமிழ் சமூகத்தினுள் பிரிவினைகளை உன்ன்டுபன்னவே இது போன்ற அறிக்கைகளை வெளியிடுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை யார் தடுத்தாலும் புலம் பெயர் தமிழ் சமூகம் இனபடுகொலை மற்றும் போர்க் குற்றங்களை கைவிட போவதில்லை.
அதிர்வு



இளமாறன் தமிழ்நாடு
இது உண்மையாக இருப்பின், மகிழ்ச்சியான செய்தி. விரைவில் போர் தொடங்கி தமிழ் ஈழம் வென்று எடுக்கப்பட வேண்டும். அப்படி நடப்பதற்கு முன், எகிப்த் மற்றும் லிபியாவில் நடக்ககும் ஜனநாயக வழி போரட்டத்தை போல் ஒரு போரட்டத்திற்கு , தமி்ழ் ஈழ மக்கள் தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும்.(இனியும் இழப்பதற்க்கு ஏதுமில்லை) ஜனநாயக வழி போராட்டங்களுக்கு தான் சர்வதேச நாடுகள் உடனடியாக ஆதரவு தெரிவிக்கின்றது. ஒரே நேரத்தில் ஜனநாயக வழி போராட்டமும், கொரில்லா போராட்டமும், அதே சமயத்தில் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழம் நாடுகளில், அவர்களால் கொடுக்கப்படுகின்ற அழுத்தங்களு்ம் தான் தமிழ் ஈழம் வென்று எடுக்க வழி வகுக்கும். தற்போது , ஈழ தமிழர்கள் தங்களுக்குள்ளே சண்டையிடாமல், ஒற்றுமையுடன் இருந்து , நாடு கடந்த தமி்ழீழ அரசுக்கு ஆதரவு வழங்குவது அவசியம்.