பதிந்தவர்:
தம்பியன்
28 February 2011
தேசத்தின் அன்னை மற்றும் வான்கரும்புலிகள் கேணல் ரூபன் லெப் கேணல் சிரித்திரன் ஆகியோரின் இரண்டாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும்,
தமிழீழவிடுதலைப்புலிகளின் நிதித்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் ச.
தமிழேந்தி,
கப்டன் பண்டிதர்,
மற்றும் 7.2.2005
அன்று வெலிக்கந்தைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மட்டு அம்பாறை அரசியற் துறைப் பொறுப்பாளர் லெப் கேணல் கௌசல்யன்,
மேஐர் புகழன்,
மேஐர் செந்தமிழன்,
இரண்டாம் லெப் விதிமாறன்,
மற்றும் தீயில் சங்கமமான வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்,
ஈகைப்பேரொளி முருகதாசன்,
உட்பட்ட 17
வீரத்தமிழ் மகன்களுக்கான நினைவு வணக்க நிகழ்வும் ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி,
அவர்களின் வீரவணக்க நிகழ்வும் யேர்மனி நொய்ஸ் நகரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வு ஈகைச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகி மலர்வணக்கம் கவிவணக்கம் இசைவணக்கம் என்று பல நிகழ்வுகளுடன் நடைபெற்றது.
யேர்மனியிலேயே பிறந்த எம் தமிழ் சிறார்களின் இசைவணக்க நிகழ்வு அங்கு வருகைதந்திருந்த அணைவரதும் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.











0 Responses to யேர்மனி நொய்ஸ் நகரில் நடைபெற்ற வீரத்தாயின் வீரவணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)