Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ தேசியத்தலைவரின் தாயார் பார்வதியம்மாளின் பூதவுடல் தகனம் செய்யப்படவிருந்த சமயம் வல்வெட்டித்துறை நகரில் வர்த்தக நிலையங்களை மூடியிருந்த வர்த்தகர்கள் இன்று காலை விசாரணைகளுக்கு வரவேண்டும் என இராணுவத்தினர் கூறியுள்ளனர்.

பர்வதியம்மாளின் தகனம் செய்யப்படவிருந்த நிலையில் நகரிலிருந்த சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டதுடன் இராணுவத்தினர் அறுத்தெறிந்திருந்த கறுப்புக் கொடிகளையும் சில வர்த்தகர்கள் மீளவும் கட்டியிருந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த இராணுவத்தினர் தமது புலனாய்வாளர்கள் மூலம் வர்த்தகர்கள் அனைவரும் நாளை பருத்தித்துறை இராணுவ நிலையத்திற்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நாளை எப்படியான அச்சுறுத்தல் விடுக்கப்படுமோ என்ற அச்சத்தில் வல்வெட்டித்துறை வர்த்தகர்கள் அதிர்ந்துபோயுள்ளனர்.

மேலும் கிரியைகளுக்காக பார்வதியம்மாளின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த வீட்டைச் சுற்றி இராணுவத்தினர் குவிக்கப்பட்டு மரணச் சடங்கிற்கு வந்த மக்கள் பலர் விசாரிக்கப்பட்டனர்.

0 Responses to வீரத்தாயின் இறுதிக் கிரியைகளின்போது கடைகளை மூடிய வர்த்தகர்கள் விசாரணை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com