தமிழர்களை நாய்களைப்போல சுட்டு வீசுவோம் என்ற எச்சரிக்கை இதனால் விடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் வாழும் பார்வதிப்பிள்ளையின் மகள் இறுதிக்கிரியைகளுக்கு போக முயற்சித்து அனுமதி மறுக்கப்பட்டது தெரிந்ததே. இதன் காரணமாக மாறு வேடத்தில் அவர் வருகிறாரா என்று அறிய இராணுவம் இறுதிக்கிரியைக்கு போன பெண்களை பரிசோதித்ததும் தெரிந்ததே.
இந்த நிலையில் பார்வதிப்பிள்ளையின் அஸ்த்தி கரைக்கும் நிகழ்வு வழமைபோல நடைபெறும் என்று வல்வைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து தாம் வல்வைக்கு தொடர்பு கொண்டதாகவும் சாம்பல்காடாத்து முறைப்படி நடக்குமென தமக்கு தகவல் கிடைத்ததாகவும் பார்வதிபிள்ளை அவர்களின் மகன் மனோகரன் வேலுப்பிள்ளை அலைகளுக்கு தெரிவித்தார்.



0 Responses to மாறு வேடத்தில் வீரத்தாயின் மகள் - இறுதிக்கிரியைக்கு போன பெண்களை பரிசோதித்த இராணுவம்