இடம்பெயர்ந்த மக்களின் சொத்துக்களை சிங்களவர்களை சூறையாடுவதற்கும் உறுதுணையாக நின்று செயற்படுபதாகவும் இவர் விசுவமடுவின் றெட்பான பாரதி வித்தியாலய பகுதியில் முகாம் அமைத்து செயற்பட்டுக்கொண்டிருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இடம்பெயர்ந்த மக்களை விசுவமடுவிற்கு அப்பால் புதுக்குடியிருப்பு பகுதியில் மீள்குடியேற அனுமதிக்காத நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களின் சொத்துக்களை கையகப்படுத்தி சிங்களவர்களுக்கு விற்பனை செய்யும் அதேவேளை, விசுவமடுப்பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்களிடம் கப்டன் வசந்த தலைமையிலான ஸ்ரீலங்காப்படையினர் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகவும் மக்கள் தெரிவத்துள்ளார்கள்.
தமிழ் மக்களின் சொத்துக்களையும் விடுதலைப்புலிகளின் நிர்வாக அலகுகளின் சொத்துக்களையும் சூறையாடி சிங்களவர்களுக்கு விற்பனை செய்துகொண்டிருக்கும் ஸ்ரீலங்காப்படையின் விசுவமடு பொறுப்பாளனாக கப்டன் வசந்த செயற்பட்டுக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



0 Responses to விசுவமடுவில் மீள்குடியேறியுள்ள மக்களின் சொத்துக்களை அபகரிக்கும் படையினர்