Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்காவின் முன்னாள் படைத் தளபதியும், ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு இன்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட இருக்கின்றது.

இது பற்றிக் கருத்துரைத்த மேலதிக தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, ஜனநாயக தேசியக் கூட்டமைப்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டிருந்த பிரபல நாடக நடிகர் ஜயந்த கெதாகொட இந்த வெற்றிடத்தை நிரப்ப இருப்பதாகத் தெரிவித்தார்.

ஜனநாயக தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டிருந்த ஜே.வி.பியின் உறுப்பினர் லக்ஸ்மன் நிபுணாராச்சி இந்தப் பதவிக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருந்த போதிலும், அது தனக்குரியதல்ல பொன்சேகாவின் பதவி எனத் தெரிவித்திருந்த அவர், பதவிப் பரமானம் ஏற்க மறுத்திருந்தார்.

2001ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் கடுவல தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி இருந்த பிரபல நாடக நடிகர் ஜயந்த கெதாகொட, 2010ஆம் ஆண்டு ஜனநாயக தேசியக் கூட்டமைப்பில் இணைந்திருந்தார்.

0 Responses to பொன்சேகாவின் இடத்திற்கு மற்றொருவர் - இன்றிரவு வர்த்தமானி அறிவித்தல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com