தமிழின் ரத்த உறவுக்காய் தணலிற்கே தம்உயிர் தந்து தமிழனின் தன்மானத்தை தரணிக்கே நிலை நாட்டிய தியாகச்சுடர்கள் முத்துகுமார் மற்றும் முருகதாஸ் உட்பட ஏனைய வீரச் செம்மல்களின் நினைவாகவும்.
எமது இயக்கத்தில் எமது தேசியத் தலைவர் பிரபாகரனுடன் அக்காலத்தில் தோளோடு தோளாய் நின்று இயக்கத்தைப் பலமாகக் கட்டியெழுப்புவதற்காக அயராது உழைத்த லெப்டினன் கேணல் பொன்னம்மான் உட்பட எட்டு வேங்கைகளின் நினைவாகும்.
ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி .சத்தியமூர்த்தி அவர்களின் நினைவாகும்.
அத்தோடு தமிழர்களின் வீர வரலாற்றில் என்றும் காணாத வான்படைகரும்புலிகள் கேணல் ரூபன் மற்றும் லெப்டினன் கேணல் சிரித்திரன் அவர்களின் நினைவாகவும்........
தொடர்ந்து எம் விடியலுக்காய் தம் உயிரை அர்பணித்த அனைத்து மாவீரர்கள், மக்கள் நினைவாகவும் இன்று பேர்லினில் நினைவுவணக்க நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது இவ் நிகழ்வில் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்ட ஆயுத எழுத்து பத்திரிக்கை உதவி ஆசிரியர் திரு கனகரவி அவர்கள் ஈழத் தமிழர்களின் வரலாற்றுரீதியான தமிழீழ உரிமையை மீள்நினைவு படுத்தியது மட்டும் அல்லாமல் தமிழ் மக்கள் தற்சமயம் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான பிரச்சனைகளை ஆராய்ந்து அவர்களுக்கு பலம் சேர்க்கும் முகமாக எங்கள் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை இந்த உலக நாடுகள் நிச்சயமாக ஒரு நாள் ஏற்று கொள்ளும் காலம் மிக விரைவில் வரும் ஆனால் அதற்கு புலம்பெயர் மக்களாகிய நாம் கடினமாகத் தொடர்ந்தும் அயராது உழைக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
அடிமைகளாக வாழமாட்டோம் என்பதற்காக போராட வேண்டிய எத்தனை மக்களின் உயிர்கள் அநியாயமாக பறிக்கப்பட்டது என்பதையும் தனது உரையில் இணைத்துக் கொண்டார் .எழுச்சி கலைநிகழ்வுகளுடன் நடந்தேறிய இவ் அழியாச்சுடர் நிகழ்வு இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எனும் பாடலுடன் சிறப்பாக முடிவுபெற்றது.



0 Responses to யேர்மன் தலைநகரில் நடைபெற்ற "அழியாச்சுடர்" நினைவுநிகழ்வு (படங்கள் இணைப்பு)