Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவனை பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க விடாமல் திருப்பி அனுப்பிய இலங்கையைக் கண்டிக்கும் வகையில், அந்நாட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, இந்தியாவில் உள்ள வழக்கு தொடர்பாக உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனை இலங்கை அரசு திருப்பி அனுப்பி இருக்கிறது.

திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர். எந்த நாட்டிற்கும் எப்போது வேண்டுமானாலும் செல்ல இந்த பாஸ்போர்ட் அனுமதிக்கும். ஆனால் அவரை இலங்கை திருப்பி அனுப்பியது இந்திய அரசை அவமதித்த செயலாகும்.

சென்னை நீதிமன்றத்தால் கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்ட குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அமைச்சர் இந்தியாவுக்கு தாராளமாக வந்து செல்கிறார். ஆனால் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரை இலங்கை திருப்பி அனுப்புகிறது. இது பெரும் அவமானம்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தேடப்பட்ட குற்றவாளி என அறிவிக்கப்பட்ட இலங்கை அமைச்சரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த சர்வதேச காவல்துறை மூலம் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

0 Responses to திருமாவளவனை திருப்பி அனுப்பியதைக் கண்டித்து டக்ளஸை கைது செய்ய வேண்டும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com