அடுக்குமுறையாலும், அரசபயங்கரவாதத்தாலும் அடிமைகளாக வாழ்ந்த எமது இனத்தின் மத்தியில் விடுதலை வேட்கையை உருவாக்கி, திரும்பவும் எமது அடையாளத்தை உலகிற்கு நிலை நாட்டி, முப்பது வருடங்களாக தலைநிமிர வைத்த எமது தேசியத்தலைவரை எமது இனதிற்கு தந்த அந்த வீரத்தாய் காலத்தால் அழியாத வீரத்திலகம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பியெல்லா நகரிலும், திங்கட்கிழமை றேயியோ நகரிலும் அஞ்சலிகள்நடைபெற்றன.இன்று செவ்வாய்கிழமை பி.ப. 6 மணிக்கு ஜெனேவா நகரிலும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 11 மணிக்கு பொலோனியா நகரிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடை பெறவிருக்கின்றது. தொடர்ந்து ஏனைய நகரங்களிலும் அஞ்சலி நிகழ்சிகள் ஒழுங்கு செய்யப்படவுள்ளது.




0 Responses to எமது வீரத்தாய்க்கு இத்தாலி மேற்பிராந்திய தமிழர் ஒன்றியத்தின் வீரவணக்கம்