ஈகைச்சுடரினை நாடுகடந்த தமிழீழ அரசின் பிரான்ஸ் வடபிராந்தியப் பிரதிநிதி.
திரு. சரவணமுத்து சசிகுமார் அவர்கள் ஏற்றிலைத்தார். அதனைத் தொடர்ந்து அகவணக்கம் நடைபெற்றது.
மலர்வணக்கத்தை மக்களவை உறுப்பினர்களான திருமதி. பா. மேரியோசப்பின் அவர்களும் திரு. தா. குமரன் அவர்களும் ஆரம்பித்து வைத்தனர். அதனைத்தொடர்ந்து, அனைத்து உறவுகளும் பார்வதி அம்மாவின் திருஉருவப் படத்திற்கு மலர்வணக்கமும், மெழுகுதீப வணக்கமும் செலுத்தினரர்கள்.
அதனைத் தொடர்ந்து பார்வதி அம்மா நினைவு சுமந்த கவிதைகளும், நினைவுப் பாடல்களும் இடம் பெற்றன.
இறுதியில் ஐரோப்பியத் தமிழர் ஒன்றியத் தலைவர் திரு. ந. கிருபானந்தன் அவர்கள் உரையாற்றுகையில் தற்போது புலம் பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களின் செயற்பாடுகள் எவ்வாறு தொடரப்படவேண்டும் எனவும் அதற்கு அனைத்து உறவுகளும் ஒற்றுமை உணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார்.
நிறைவாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” பாடலுடனும் எழுச்சிக் கோசத்துடனும் தேசத்தின் அன்னை பார்வதி அம்மா வீரவணக்க நிகழ்வு நிறைவுக்கு வந்தது.



0 Responses to பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க்கில் நடைபெற்ற வீரத்தாயின் வீரவணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)