லிபியாவில் மக்கள் ஆட்சியாளர்களின் ஆயுத பலத்திற்கு முன்னாள் சுதந்திரத்திற்காக பல நூற்றுக்கணக்கான உயிர் இழப்புகளுக்கு முன்னால் தொடர்தும் போராடி கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு புலம்பெயர்த்து வாழும் லிபிய மக்களுடன் பல இன நாட்டு மக்களும் சேர்ந்து அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த வகையில் சர்வதிகார சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக தமிழ் இன மக்களின் விடுதலைக்காக போராடும் நாம் இந்த மக்கள் எழுச்சியுடன் இணைந்து கொண்டு, சர்வதேச நாடுகளிடம் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கு மதிப்பு அளிக்கும்படி போராடுவோம்.
சர்வதேச நாடுகள் தமது சொந்த பொருளாதார நலனுக்க மக்களின் நலன்களை மீறி ஆட்சியகளை உருவாகுவதும், நாடுகளை உருவாகுவதும் பிரிப்பதுமான காலனித்துவ சிந்தனையுடன் ஆட்சியை தொடர்ந்து மக்கள் நலன் கருதாது ஆட்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் இன்று நடைபெற்றுகொண்டிருக்கும் மக்கள் எழுச்சி இந்த சர்வதேச நாடுகளை தமது செயல் திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை நாம் எதிர்பார்க்கலாம்.
எமது மண்ணில் எமது மக்கள் அடக்கு முறையின் உச்சகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் விடுதலைக்காக போராடுபவர்களாக நாம் மாறவேண்டும். நாம் புலம் பெயர்த்து வாழும் நாடுகளில் ஆட்சியாளர்களுடன் நாம் ராஜதந்திர அரசியல் தொடர்புகளை ஏற்படுத்துவதோடு மட்டுமில்லாமல், மக்கள் எழுச்சி போராட்டமும் அத்துடன் மிக அவசியமாகிறது. இந்த உலக மாற்றத்துடன் எமது போராட்டமும் சேர்ந்து செல்லவேண்டியது அவசியம்.
அந்த வகையில் இன்று நாம் விடுதலையை வேண்டி நிற்கும் மக்களுடன் சேர்ந்து நிற்கும் போராட்டங்கள் எமது விடுதலை போராட்டத்தின் வலுவை வளர்க்கும்.
சென்ற வருடம் உலகெங்கும் எமது ஜனநாயக விருப்பை தமிழ் ஈழ தாயகத்தை வலியுறுத்தினோம், இன்று உலகத்திடம் கொசோவோ , கிழக்கு திமோர், தென் சுடன் போன்ற நாடுகளில் நடைபெற்ற சர்வஜன வாக்கு போன்று தமிழீழ மக்கள் இடையே சர்வதேசம் உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாம் அனைவரும் உலகத் தமிழர்களா நின்று குரல் கொடுப்போம், உலக மக்களுடன் இணைத்து எமது போராட்ட வலுவை அதிகரிப்போம், உலகத்தில் வாழும் அணைத்து மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துவோம்.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.
தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு
மின்னஞ்சல்: mte.france@gmail.com



0 Responses to பிரான்சில் விடுதலையை தேடி நிற்கும் மக்கள் மாபெரும் ஆர்பாட்டத்தில் ஒன்றிணைந்தனர்