Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ தேசியத்தலைவரின் தாயாரின் பூதவுடலை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நேரில் சென்று பர்வையிட்டுள்ளதுடன் அஞ்சலியும் செலுத்தியுள்ளார்.

இன்று காலை இறைபதமடைந்த அன்னையின் பூதவுடலை பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் நேரில் சென்று பார்வையிட்ட பாரளுமன்ற உறுப்பினர் தனது அஞ்சலிகளை செலுத்தியதுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலங்கத்தை நேரில் சந்தித்தும் பேசினார்.

அன்னையின் பூதவுடல் இன்று 4மணியளவில் தீருவில் மயானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை மாலை அன்னையின் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு சம்பிரதாய பூர்வமான கிரியைகள் நடைபெறும்.

இதேவேளை அன்னையின் மறைவையிட்டு கறுப்புக் கொடிகளை கட்டவும் அஞ்சலிக் கூட்டங்களை நடத்தவும் இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளனர் எனவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 Responses to தமிழீழ தேசியத் தலைவரின் தாயாருக்கு அஞ்சலி செலுத்திய சிறிதரன் (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com