எமது தேசியத் தலைவர் அவர்களின் தாயாரின் இழப்பு உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும் மாபெரும் இழப்பாகும். எமது தலைவரின் தந்தையார் திரு.வேலுப்பிள்ளை அவர்கள் இறந்து ஓராண்டு ஆன நிலையில் தலைவரின் தாயாரும் இறந்தது கண்டு உளம் வெதும்பி மீளாத்துயரில் எம் தமிழினம் இருக்கிறது.
போரின் பொழுது வன்னியிலும், போரின் பின்னர் வதை முகாமிலும் என எம் இனம் பட்ட அத்துனை துயரங்களையும் அனுபவித்து, இன்று எம்மை விட்டு பிரிந்துவிட்ட அந்த வீரத்தாயின் நினைவை நாம் ஒருபொழுதும் மறந்துவிடக்கூடாது.
எந்த இந்திய அரசு தன் மண்ணில் கால் வைக்க விடாமல் தடுத்து அனுப்பியதோ, அவ்விந்திய அரசு மீண்டும் அழைத்தபொழுதும் தன்மானத்தோடு மறுத்து தன் சொந்த மண்ணில், சொந்த மக்களோடு இறுதி காலத்தை கழித்தார் எமது தாய் பார்வதியம்மாள்.
எமது தேசியத்தலைவரின் மனவலிமைக்கு சமமான மன வலிமையோடு, தன்னந்தனியாய் நின்றபொழுதும், யாருக்கும் அடிப்பணியாமல் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ்ந்து மறைந்துள்ள எம்தாய்க்கு வணக்கம் செலுத்துவதோடு அல்லாமல், அவரைப் போலவே எந்த நொடிப் பொழுதிலும் தன்மானத்தை இழக்காது வாழ நாம் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்வோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
இங்ஙனம்,
ஊடகத் துறை,
நோர்வே ஈழத்தமிழர் அவை,
நோர்வே.



0 Responses to ஈழத்தாய் பார்வதியம்மாள் அவர்களுக்கு நோர்வே ஈழத்தமிழர் அவையின் கண்ணீர் அஞ்சலி