முகம் இழந்து முகவரி இழந்து உரிமை இழந்து அடக்கி ஒடுக்கப்பட்ட ஈழத்தமிழினத்திற்கு முகவரி தேடித்தந்து கூன்முதுகை நிமிர்த்திய ஒரு மாபெரும் தலைவனை தன் கருவில் சுமந்த எமது இனத்திற்று கொடையாய்த் தந்தவர் வீரத் தமிழ் மகள் பார்வதியம்மா. வீரமகனைப் பெற்றதற்காக சிங்கள இனவெறி அரசாலும் இந்திய அராஐக அரசாலும் பலமுறை பல துன்பங்களை அனுபவித்தவர் பார்வதியம்மா.
தனது உடல் தளர்ந்த நிலையிலும் கொடுங்கோல் இந்திய அரசு விதித்த நிபந்தனைகளுக்கு அடிபணியாமல் வீர மகனைப் பெற்றெடுத்து வீரத்தாய் நான் என தன்னை உலகிற்கு வெளிப்படுத்திய உன்னதமான ஈழத்தமிழ் மகள் பார்வதியம்மா.
தமிழீழ விடுதலைப்போராட்டம் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டு ஓர் உன்னதமான நிலைக்கு தேசியத் தலைவர் அவர்களால் வழிநடத்தப்பட்ட வேளையில் அப்போராட்டம் காரணமாக தமது சொந்த வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்த பார்வதியம்மா அவர்கள் எக்கால கட்டத்திலும் மனவுறுதி தளரவில்லை. அவருடைய இந்த உறுதி தமிழர்களாகிய எங்களுக்கு பல செயதியை கூறுகிறது.
தமிழீழம் எதிரிகளாலும்அன்னியர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு சிதைக்கப்பட்டுவரும் இவ் வேளையில் பார்வதியம்மாவின் தளராத உறுதியைப் போல் எங்கள் மக்கள் உறுதிகொள்ள வேண்டும்.
கரிகாலனைச் சுமந்த தாய், காவிய நாயகனை களம் அனுப்பிய தாய், பிதாமகனைப் பெற்றெடுத்த தாய், பெரும்பேறு கொண்ட பெருந் தலைவனை உலகிற்கு படைத்த தாய், எங்கள் தாய், எங்கள் தேசத்தின் முதற் தாய் எங்கள் பார்வதியம்மாத் தாய்க்கு சுவிஸ் ஈழத்தமிழரவை ஒட்டுமொத்த சுவிஸ் ஈழத்தமிழர்கள் சார்பாக எமது கண்ணீர் அஞ்கலியையும், வீரவணக்கத்தையும் தெருவித்துக் கொள்கிறோம். அவரின் பிரிவால் துயலுறும் பிள்ளைகள், மருமக்கள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் அனுதாபங்களையும் தெருவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
சுவிஸ் ஈழத்தமிழரவை



0 Responses to வீரத்தாய்க்கு வணக்கம்: சுவிஸ் ஈழத்தமிழரவை