Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அன்னை பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இன்று ஞாயிறு பிற்பகல் 7 மணியளவில் அன்னைபூபதி வளாகத்தில் நினைவு வணக்க நிகழ்வு நோர்வே தமிழர் ஒருங்கிணப்புக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில் நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் தமிழீழ தேசத்தின் அன்னைக்கு மலர் வணக்கத்தையும்; இதய அஞ்சலியையும் செலுத்திக் கொண்டனர். புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் உணர்வுகளால் ஒன்றிணைந்த மக்கள் தம் உள்ளத்தின் வலியுடன் ஒன்று சேர்ந்து தமது இறுதி வணக்கத்தை செலுத்தினர்.

அங்கு நடைபெற்ற நிகழ்வில் தமிழர்களின் ஒற்றுமை தான் எதிர்காலத்தில் எமது உரிமையை பெற்றெடுக்க உதவும் என வலியுறுத்தப்பட்டதோடு இளையவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்தும் பேசப்பட்டது. கவிவரிகளால் அண்ணனின் அன்னைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பார்வதி அம்மையாரின் இறுதி நிகழ்வில் உரிமையுடன் பங்கேற்றிய புலம்பெயர் மக்கள் போல் தமிழீழ தாயகத்தில் எமது உறவுகள் உரிமையுடன் பங்கேற்க முடியாது என மக்கள் தமக்குள் பேசிக் கொண்டதையும் காணமுடிந்தது.


0 Responses to நோர்வேயில் நடைபெற்ற ஈழத்தாயின் வீரவணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com