புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் பல நாடுகளின் தூதுவராலயங்களில் இதற்காக தமது சிறப்பு புலனாய்வு அதிகாரிகளை பணிக்கு அமர்த்தியுள்ளதாகவும் அவர்கள் மூலமாகவே குறிப்பிட்டவர்களின் தகவல்கள் திரட்டப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இதன் முதற்கட்டமாக தற்போதைக்கு சுவிட்சர்லாந்தில் வசிக்கும் 80 பேரின் முழு விபரங்களும் அவர் வசம் சென்றிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் சிலருடைய நிழற்படங்களும் உள்ளடங்கியுள்ளன.
தற்போது புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் பிரமுகர்களை பின்தொடர்ந்து சென்று சிறீலங்காப் புலனாய்வாளர்கள் படம்பிடிப்பது அதிகரித்துள்ளதாக ஊடகவியலாளர்கள் சிலர் எமது இணையத்தளத்திற்கும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் அண்மையில் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு ஊடகவியலாளரை பின்தொடர்ந்து வந்த வாகனம் ஒன்றில் இருந்தவர்கள், சிவப்பு விளக்கில் நின்றுகொண்டிருந்தபோது திடீரென எதிர்பாரதவேளையில் படம்பிடித்ததுடன், பச்சை விளக்கு விழுவதற்கு முன்பாகவே அங்கிருந்து தங்கள் வாகனத்தில் தப்பிச் சென்றனர் என அந்த ஊடகவியலாளர் எமக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கு மேலாக அரசாங்கத்தின் உயர்பதவிகளில் இருந்துவிட்டு அரசுடன் முரண்பட்டுக் கொண்ட ஊடகவியலாளர்கள் மற்றுத் அதிகாரிகள் எந்தெந்த நாடுகளில் பதுங்கியுள்ளார்கள் என்பதை தேடிக்கண்டறியவும் விபரங்களை சேகரிக்கவும் புலனாய்வாளர்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபரம் சேகரிக்கும் பணிகளுக்கு சிறீலங்காவுடன் இணைந்து இயங்கும் கே.பி, ஈ.பி.டி.பி மற்றும் உதிரி தமிழ் ஒட்டுக்குழுக்களின் வெளிநாட்டில் உள்ள பிரதிநிதிகளும் அவர்களுடன் வெளிநாட்டவர்களும் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.



0 Responses to தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவானவர்களின் விபரங்களை சேகரிக்கும் கோத்தபாய!