Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருமதி. வேலுப்பிள்ளை பார்வதியம்மா அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 630 மணிக்கு காலமானார் என்பதனை அறிந்து மிகவும் தாங்கொணா வேதனையில் ஆழ்ந்துள்ளோம்.

தரணியில் தமிழரை தலை நிமிர வைத்த வீரப் புதல்வனைத் தந்த ஈழத்தாய்க்கு பிரித்தானிய தமிழ் மக்கள் சார்பில் பிரித்தானியத் தமிழர் பேரவை சிரம் தாழ்த்தி வணங்குகின்றது.

பார்வதியம்மா அவர்கள் இந்த பூமிப்பந்தில் தமிழினம் உள்ள வரை எல்லோருடைய நெஞ்சங்களிலும் தமிழினத்தின் வீரனைப்புதல்வனைப் பெற்ற வீரத்தாயாகவும், எமது விடுதலையை என்றுமே நினைவு படுத்தும் தேசியச் சின்னமாகவும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

அன்னையின் குடும்பத்தினருக்கும் மறைவுச் செய்தி கேட்டுத் தாங்கொணத் துயரில் ஆழ்ந்திருக்கும் உலகத் தமிழர்களுக்கும் எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பிரித்தானியத் தமிழர் பேரவை

0 Responses to ஈழத்தாய் பார்வதியம்மாள் அவர்களுக்கு பிரித்தானியத் த.பேரவையின் கண்ணீர் அஞ்சலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com