Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

துயிலுங்கள் அம்மா துயிலுங்கள்;
தேசியத்தலைவனின் வரலாற்றை
வயிற்றில் சுமந்ததாயே!
துயிலுங்கள் அம்மா துயிலுங்கள்
வீரம், வெற்றி, பின்னடைவெல்லாம்------------
நெஞ்சில் கொண்ட தாயே!
துயிலுங்கள் அம்மா துயிலுங்கள்
தமிழீத்தின் கடலம்மா நீங்கள்
தமிழீழ மக்களின் இதயங்களில்
பரந்து, விரிந்து அலையாய் அடிக்கிறீர்கள்
துயிலுங்கள் அம்மா துயிலுங்கள்
முள்ளிவாய்க்காலில் கவலைகொண்டெழுந்த
எங்களது இதயத்தின் அலைகள்
மீண்டுமொருமுறை அடிக்கிறதே! அம்மா
தமிழீழ அரசு பிறந்திருந்தால்
உங்கள் காலடிக்கு வந்து
கவலை கொட்டி அழுதிருப்போம் அம்மா
தாயின் உள்ளத்தை தாய்மையே உணரும்
ஒரு கவிதையில்
எங்கள் இதயங்களை இணைக்கிறோம் அம்மா
தலைவன் மூட்டிய விடுதலைத் தீ
அணைந்து போகதம்மா போகாது
நீங்காத விடுதலை நினைவுகளோடு
துயர் பகிர்கின்றோம் அம்மா
துயிலுங்கள் அம்மா துயிலுங்கள்

தமிழ்ப் பெண்கள் அமைப்பு
பிரான்ஸ்

0 Responses to துயிலுங்கள் அம்மா துயிலுங்கள் - பிரான்ஸ் பெண்கள் அமைப்பின் கண்ணீர் அஞ்சலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com