Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தாயொருவரின் துயர் கேட்டு தமிழினத்தின் துயர் துடைக்கப் புயலெனப் புறப்பட்ட தானைத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களைத் தமிழுலகத்திற்குப் பெற்றுத்தந்த வே. பார்வதிப்பிள்ளை அவர்கள் 20.02.2011 ஞாயிற்றுக் கிழமை காலை 6.10 க்கு சாவடைந்த செய்தி உலகத்தமிழரிடையே...

சொல்லிலும், எழுத்திலும் வெளிப்படுத்திவிட முடியாத துயரை ஏற்படுத்தியிருக்கும். நெஞ்சை ஆற்றுப்படுத்துவேம். தமழினத் தலைவரின் தாயார் தமிழினத்தின் தாயல்லவா?

உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் ஒன்றிணைந்து போற்றி வணங்குவோம். தமிழுக்கு உயிர் தந்த தலைவரின் தாயாரின் உயிரற்ற உடலத்தை இறுதியாகத் தொட்டு வணங்க வழியின்றி அவர் பெற்ற பிள்ளைகளும், அவர் பெற்றெடுக்காத பிள்ளைகளாகிய தமிழரும் நெஞ்சம் குமுறி அழுவதை உணரமுடிகின்றது. இப்பொழுதும் நெங்சை ஆற்றுப்படுத்துவோம்.

காரணத் தடையை உடைத்தெறிவது தான் அன்னைக்குச் செய்யும் அளவிட முடியாத அஞ்சலி என்பதை எண்ணங்களில் அலைமோதச் செய்வோம். தமிழின விடுதலைக்காகத் தமிழீழ மண்ணில் விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமைதாங்கிய தலைவரின் பெற்றோரும் மக்களோடு மக்களாக தமிழீழ மண்ணிலேயே வாழ்ந்தார்கள.; மக்கள் பட்ட துன்பங்களை எல்லாம் தாங்களும் அனுபவித்தார்கள். தமிழீழ மண்ணிலேயே உயிரையும் துறந்தார்கள்.

தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெருமையாகப் பதியப்படும் நிகழ்வுகளில் ஒன்றாகத் தான் இவர்களின் உயிர்த்துறப்பும் பதியப்படும். பல கோடித் தமிழரின் ஆழ் மனதில் படரும் தலைவரின் தாயாரது நினைவை அவரின் பாதங்களில் அஞ்சலி மலராகத் தூவுவோம்.


"தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்"


"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
தமிழீழ விடுதலைப்புலிகள்
சுவிஸ் கிளை


0 Responses to தாயே… தமிழர் தலைவரின் தாயே… வணங்குகின்றோம்: தமிழீழ விடுதலை புலிகள் சுவிஸ் கிளை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com