சிறீலங்கா அரச புலனாய்வாளர்கள் இந்தச் செய்தியை வெளியிட்டிருப்பதன் ஊடாக, ஒரு கல்லில் பல காய்களை வீழ்த்த எண்ணியிருப்பது, அல்லது திட்டம் தீட்டியிருப்பது புலனாகின்றது.
இந்த செய்தி முத்துவேல் கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கும், சோனியா – மன்மோகன் தலைமையிலான இந்திய அரசுக்கும் பாரிய அழுத்தத்தைக் கொடுக்கும். இதன் மூலம் சீனாவின் உத்தரவுக்கு அமைவாக சோமாலியக் கடற் கொள்ளையர்கள் மூலம் தமிழ்நாடு கடற்றொழிலாளர்களைப் படுகொலை செய்திருப்பதாக எழுந்துள்ள இந்தியத் தரப்புக் குற்றச்சாட்டுக்களை மறைக்கலாம்.
இந்திய சமுத்திரக் கடற் பரப்பில் தனது ஆதிக்கத்தைச் செலுத்த முனையும் சீனாவின் உத்தரவுக்கு அமைவாக சிறீலங்கா அரசாங்கமும், அதன் கடற்படையினரும் சோமாலியக் கடற்கொள்ளையர்களை அனுமதித்து, எரிபொருள் வழங்கி, தங்க இடமளித்து வருவதாக இந்திய அரசாங்கம் (துணிவின்றி) ஊடகங்கள் வாயிலாக முன்வைக்கும் குற்றச்சாட்டையும் மழுங்கடிக்கலாம்.
முக்கிய பிரமுகர்களைப் படுகொலை செய்யவதற்கான பயிற்சியும் வழங்கப்படுவதாக கூறியிருப்பதன் ஊடாக யாராவது பிரபல அரசியல் தலைவர் ஒருவரைப் படுகொலை செய்துவிட்டு அதனை விடுதலைப் புலிகள் மீதும் போடலாம்.
மறு பறத்தில், முதலமைச்சர் கருணாநிதி புலிகள் முகாம் அமைக்க அனுமதி வழங்கி விட்டார் என்ற தோற்றப்பட்டை உருவாக்கி, அனைத்துலக தமிழ் மக்களின் எதிர்பலைகளை தேர்தல் காலத்தில் குறைக்கலாம்.
முன்னணி இயக்குனர் ஒருவரும் புலிகளின் பயிற்சி முகாமிற்கு துணை போவதாகத் தெரிவித்திருப்பதன் ஊடாக, சீமான் போன்ற ஈழ விடுதலை ஆதரவாளர்களை தமிழ்நாடு அரசாங்கம் மீண்டும் பிடித்து சிறையில் அடைக்கவும் வழி செய்யலாம்.
இங்கே ஒரு கேள்வி எழுகின்றது, இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தியைப் படுகொலை செய்து விட்டதாகக் குற்றம் சுமத்தும் இந்திய காங்கிரஸ் அரசாங்கம், ஈழத்தமிழ் மக்களையும், அவர்களின் தலைமையாகிய தமிழீழ விடுதலைப் புலிகளையும் ஒழித்துக்கட்ட கங்கணம்கட்டி நின்று இறுதிக்கட்டப் போரில் பாரிய உதவிகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் வழங்கியது.
அதே இந்திய அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி முகாம் அமைத்துக் கொடுக்குமா?



0 Responses to விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் செய்தி – ஏன்? எதற்காக??