Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கீரிமலைக்குத் தினமும் பெரும் எண்ணிக்கையான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் சென்று வருகின்றபோதிலும், அப்பகுதியில் தங்களை மீளக்குடியமர்வதற்கு இதுவரை ஏன் அனுமதி வழங்கப்படவில்லை என அந்தப்பகுதி மக்கள் விசனத்துடன் கேள்வியெழுப்பியுள்ளனர்.

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இருந்து 300 மீற்றர் தூரம் வரை மக்கள் மீளக்குடியமர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் செய்தி வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் கீரிமலையில் மட்டும் ஏன் குடியமர அனுமதிக்கவில்லை என அவர்கள் கேட்டுள்ளனர்.

இது தொடர்பாக கீரிமலையைச் சேர்ந்த நா.பரமேஸ்வரன் என்பவர் தெரிவித்துள்ளமை வருமாறு:

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திலிருந்து 300 மீற்றர் தூரம் வரை மீள்குடியமர்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.எதற்காக கீரிமலையில் மீள் குடியமர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்ற வினாவுக்கு யாராவது விடையளிப்பார்களா?

படை அதிகாரிகளானாலும் சரி, அரச அதிகாரிகளானாலும் சரி எதற்காக கீரிமலையில் மீள்குடியமர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்குப் பதிலளிப்பார்களா?

1998 ஆம் ஆண்டு முதல் கீரிமலைக்குச் செல்வதற்கு உல்லாசப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது தினமும் நூற்றுக் கணக்கான தனியார் வாகனங்கள் கீரிமலைக்குச் சென்று வருகின்றன.

தென்னிலங்கையிலிருந்தும், ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளிலிருந்தும் யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் எதுவித தங்குதடையுமின்றி கீரிமலைக்குச் சென்று வருகின்றனர்.

ஆனால் கீரிமலை வாசிகளுக்கு மட்டும் கீரிமலையில் வசிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏன் இந்தப் பாரபட்சம் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உரிய அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0 Responses to கீரிமலையில் மக்கள் மீளக்குடியமர்வதற்கு இதுவரை அனுமதிக்கப்படாதது ஏன்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com