Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ் பல்கலைக்கழகத்தில் பொலிசாரின் அராஜகத்தை எதிர்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் இடம் பெற்ற பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கிற் கலந்து கொள்வதற்காக சென்ற பல்கலைக்கழக மாணவர்களை பொலிசார் தடுத்து நிறுத்திமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இன்று பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் எதிர்ப்பு பேரணி ஒன்றை நடத்தினர்.

அத்துடன் இன்று பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்ள வந்த வடமாகாண ஆளுநருக்கு மாணவர்கள் தமது நியாயமான விடயத்தை எடுத்துக் கூறும் வகையில் அங்கிருந்த மரங்களிலும் சுவர்களிலும் பதாதைகளையும் ஒட்டியிருந்தனர்.

"நாங்கள் தீவிரவாதிகள் அல்ல தமிழர்கள்,

பொலிசாரே வன்முறையை நிறுத்துங்கள்",

"சுதந்திரம் இல்லாத எமக்கு சமாதானம் எதற்கு",

"சாவு வீடு செல்ல தடுத்த பொலிஸ் துரோகிகளுக்கு பாதுகாப்பா"

போன்ற வாசகங்களை அவற்றில் பொறித்திருந்தனர்.



0 Responses to யாழ்.பல்கலைக்கழகத்தில் பொலிசாருக்கு எதிராக சுவரொட்டிகள் (படங்கள், காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com