Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ தேசியத்தலைவரை எமது இனத்திற்கு தந்த எமது வீரத்தாய் பார்வதியம்மாவிற்கு இன்று நெதர்லாந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நெதர்லாந்து வாழ் தமிழர்கள் சார்பாக நெதர்லாந்தின் பல இடங்களில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழீழத்தின் வீர வரலாற்றைப் படைத்த வீரத் திருமகனை பெற்ற பார்வதி அம்மாவின் பிரிவு இன்று உலகத்தமிழ் மக்களையே கவலையில் ஆழ்த்தியுள்ளது. விடுதலை பெருநெருப்பாற்றில் அன்னை கடந்து வந்த சோதனைகள் ஒன்றல்ல இரண்டல்ல. எனினும் உலகத் தமிழினத்திற்கு புதிய முகவரி தந்து தமிழினத்தை தலை நிமிர வைத்த தானைத் தலைவனை பெற்ற வீரத்தாயாக தமிழீழ வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். அடுக்குமுறையாலும்இ அரசபயங்கரவாதத்தாலும் அடிமைகளாக வாழ்ந்த எமது இனத்தின் மத்தியில் விடுதலை வேட்கையை உருவாக்கி திரும்பவும் எமது அடையாளத்தை உலகிற்கு நிலை நாட்டி முப்பது வருடங்களாக தலைநிமிர வைத்த எமது தேசியத்தலைவரை எமது இனதிற்கு தந்த அந்த வீரத்தாய் காலத்தால் அழியாத வீரத்திலகம்.

தேசத் தாயின் பிரிவால் துயர் உற்றிருக்கும் அவர்தம் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,உறவினர்கள், தமிழ் மக்கள் அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.எங்கள் தேசியத் தலைவரின் உறுதியான கொள்கையில் ஒற்றுமையுடன் பயணிப்பதே உங்களுக்கு நாங்கள் செலுத்தும் அஞ்சலியாகும்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு


0 Responses to நெதர்லாந்தில் நடைபெற்ற வீரத்தாயின் வீரவணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com